book

மாங்கனி

Mangani

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் கண்ணதாசன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :116
பதிப்பு :4
Published on :2017
ISBN :9788184026467
Add to Cart

இத்தகைய மாறுபட்ட எண்ண ஓட்டங்களிடையே கல்லூரிக்கால விடுமுறையில் நூலகத்தில் படித்த ‘மாங்கனி’ எப்பொழுதும் நினைவில் மணக்கிறது; கருத்தில் சுவைக்கிறது. அதனைப்பற்றிய எண்ணத்தைப் பகிர விரும்புகின்றேன். கண்ணதாசன்எழுத்துலகில் இடம் பெற்ற 10 ஆண்டுகள் கழித்து எழுதிய இலக்கியமான ‘மாங்கனி’யே அவரது முதல் காப்பியம். 1954இல் கல்லக்குடி வழக்கில் சிறைத்தண்டனை பெற்று திருச்சிராப்பள்ளி மத்தியச் சிறையில் இருந்த பொழுது உருவானது இக்காப்பியம். தம் காவிய ஆசையைத் தீர்க்கும் வகையில் நாளொன்றுக்கு ஒரு மணிநேரம் என ஆறு நாளில் முடிக்கப்பெற்றது இக்காப்பியம்.விடுதலைக்குப்பின் தாம் நடத்திய ‘தென்றல்’ இதழில் சில பகுதிகளை வெளியிட்டுள்ளார். பின்னர் எவ்வகை மாற்றமுமின்றி நூலாக வெளியிட்டுள்ளார். பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார், “கவிஞர் கண்ணதாசன் எழிற்கலைக்குத் தலைசிறந்த முதிர்ச்சி உண்டு” எனப் பாராட்டி அணிந்துரை வழங்கியுள்ளார்.   மாங்கனி வரலாற்றுக் காப்பியமல்ல. ஆனால், வரலாற்றில் இடம் பெற்ற குறிப்பை எடுத்துக் கொண்டு, கற்பனை வளத்தைச் சேர்த்து இதனைப் படைத்துள்ளார்.