ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 1)
Iyyam pokum aanmeegam(part 1)
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :189
பதிப்பு :4
Published on :2009
ISBN :9788184760415
குறிச்சொற்கள் :தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பிரார்த்தனைகள்
Add to Cartப்ரம்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள், கற்றறிந்த அறிஞர்கள் மத்தியில் தலைசிறந்த ஆன்மிக ஞானம் பெற்றவர் என போற்றப்படுகிறவர். சென்னை சமஸ்கிருதக் கல்லூரியில் முதல்வராக இருந்தவர். காஞ்சி சங்கர மடத்தின் பஞ்சாங்க கமிட்டி தலைவராக இருக்கிறார்.
சமஸ்கிருத மொழியில் ஆழ்ந்த புலமை பெற்ற இவர், இப்போதும் ஏராளமான மாணவர்களுக்கு சமஸ்கிருத உயர்கல்வி போதித்து வருகிறார். இவரிடம் ஜோதிடம் பயின்ற மாணவர்கள் இன்று நாடெங்கும் பிரபலமான ஜோதிடர்களாக இருக்கிறார்கள்.
ஆயுர்வேத மருத்துவத்திலும் கரைகண்டவர் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்.
இப்படி பல்துறை விற்பன்னராகத் திகழும் பெரியவரிடம், வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் வாங்கி வெளியிட்டால் அது மிக்க பயனுள்ளதாக அமையுமே என்று தோன்றியதன் விளைவே, சக்தி விகடனில் தொடர்ந்து வெளியாகிக்கொண்டு இருக்கும் கேள்வி&பதில் பகுதி.
வேதம், புராணம், தர்ம சாஸ்திரம், மன நலம், உடல் நலம், அன்றாட நடைமுறை, வழிபாட்டு முறைகள், ஆகம விதிகள், ஐதீகம், சடங்கு, சம்பிரதாயம், ஜோதிடம், கலாசாரம் போன்ற பல துறைகளிலும் வாசகர்கள் எழுப்பிய ஏராளமான கேள்விகளுக்கு விளக்கமாகவும் ஆணித்தரமாகவும், முழுக்க சந்தேகம் அகலும்படியாகவும் இவர் கொடுத்து வரும் விளக்கங்கள் சிலிர்க்க வைப்பவை. மூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம் என்பது சாஸ்திரிகளின் ஒவ்வொரு விளக்கத்திலும் நமக்குப் புலனாகிறது.
'உயர்ந்த கருத்துகளை, வேதத்தின் உள்கிடக்கைகளை இவ்வளவு எளிய நடையில் விளக்க முடியுமா..!' என்கிற ஆச்சரியம் இவரது பதில்களைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் என்பது உறுதி.
வாசகர்கள் காட்டிய ஆர்வமே இவ்வளவு துரிதமாக இதை நூலாகக் கொண்டுவரத் தூண்டியது. இந்த நூலில் வெளிப்பட்டிருக்கும் வாசகர்களின் சந்தேகங்களில் பல உங்களுக்கும் தோன்றியிருக்கலாம். படித்தால் தெளிவு பெறுவீர்கள். நிச்சயமாக பலனும் அடைவீர்கள்.