book

வெற்றி தரும் பஞ்சபட்சி

Vetri Tharum Panchapatchi

₹27₹30 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எண்ணம்மங்களம் A. பழநிச்சாமி
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2001
Add to Cart

"வெற்றி தரும் பஞ்சபட்சி" என்னும் இந்நூலை படித்து பயன்படுத்துவோர் அனைத்துத் துறைகளிலும் வெற்றிமேல் வெற்றி பெற்று மகிழ்ச்சி பெறுவார்கள் என்பது திண்ணம். பஞ்சபட்சி சாஸ்திர மூல நூல்கள் பலவற்றைப் படித்து, ஆராய்ந்து, அனுபவத்தில் பயன்படுத்தி வெற்றி கண்ட பின்னரே. எனது கை வண்ணத்தில் இவ்வரிய நூலை எழுதத் துணிந்தேன். பல நூல்களை ஆய்ந்த போது, ஒரு சில முரண்பாடுகள் ஆங்காங்கே காணக்கிடந்தன. அனைத்திலும் அட்டவணைப்படுத்தி, நான் மட்டுமல்லாது, எம்மிடம் ஆலோசனை பெற வந்தவர்களையும், பயன்படுத்தச் சொல்லிப் பார்த்ததில், இந்நூலில் யாம் குறிப்பிட்டுள்ள கால அளவுகளே சரியான கணிதங்களாக அமைந்து அதிருஷ்டம் நவீன என்பதை அடக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நூல் ஒரு அரிய பொக்கிஷம் ! இந்த நூல் விதியின் திறவு கோல் ! இந்த நூல் இனிய வாழ்வுக்கான பாதை ! கடிகார நிமிடங்களை, வாழ்க்கையின் நிகழ்வுகளோடு கலந்து, பயனுள்ள காரியங்களைப் படைத்து, வீரிய வித்துக்களின் தேரிய இன்பக் கனிகள் பறித்திட, எல்லோருக்கும் புண்ணியம் வாய்த்தது! எண்ணியது ஈடேறும் ! திண்ணிய நன்நெஞ்சம் தித்தித்து இதை வெளியிடும் "ஸ்ரீ செண்பகா பதிப்பகம்" திரு.R.S.சண்முகம் அவர்களுக்கு நன்றி கூறுகிறது. பஞ்சபட்சி உங்கள் வாழ்வில் வெற்றிகள் பல குவிக்கட்டும். வெற்றி தரும் பஞ்சபட்சி - - ஓம் சக்தி கணபதி சூரசங்கார சுப்ரமணி சிவாய நம சீடர் குருமுனி, அகஸ்தியர் சுந்தரானந்த ராமதேவ தன்வந்திரி நந்திதேவ கொங்கண போக கோரக்கர், இடைக்காட்டார் இனிய திரு மூலர் குதம்பைச் சித்தர் கருவூரார் பாம்பாட்டி சட்டமுனி பதஞ்சலி குதகாளாங்கி அழுகண்ண மச்சமுனியோடு சித்தர் பதிணெண்மர் பாதக் கமலம் போற்றி ! ஆதவர் புங்கவர் நல்வேத வியாசர் பராசர் அத்திரி உரோமர் வசிஷ்ட மரீசி பொலகர் யவனர் சௌனகர் மனு பிருகு காசிபரோடு ஆங்கீரசர் ஜனகர் கார்க்கியர் நாரதர் என அமைந்த மகரிஷி பதினெண்மார் பாதக் கமலம் போற்றி! கால கணித வகையில் 'பஞ்சபட்சி' என்பது ஐந்து வகையான பட்சி களை, பகல் ஐந்து ஜாமத்திற்கும், இரவு ஐந்து ஜாமத்திற்கும் பங் கிட்டு, மரணம், துயில், நடை, ஊண், அரசு என பட்சிகளின் செயல்பாடுகளின் அடிப்படையில் பலன்களை அறிவதே ஆகும். "பஞ்சம்" என்பது ஐந்து எனப் பொருள் கொண்டது, பஞ்ச அங்கங்களான வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவைகளின் கணிதங்கள் அடங்கியது "பஞ்சாங்கம்" ஆகும்.