book

எனக்குப் பிடித்த கதைகள்

Enakku piditha kathaigal

₹180₹200 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாவண்ணன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :248
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788187477686
Add to Cart

''இப்படி இருப்பது நல்லது என்று வலியுறுத்துவது இலக்கணம். அப்படி இருக்க முடியாமையின் அவஸ்தை தான் இலக்கியமோ'' என்று பேச்சின் உச்சத்தில் சொல்லிக்கொண்டோம். எங்களை மீறி எங்கள் மனம் உதிர்த்த வாசகம் அது. அதையே மீண்டும் மீண்டும் மந்திரத்தைப் போல உச்சரித்தோம். எங்களுடைய மகத்தான கண்டுபிடிப்பாக அது இருந்தது. உடனே பழனி ராவணனைப் பற்றிச் சொன்னான். நான் கோவலனை ஞாபகப்படுத்தினேன். இருக்க முடியாமையின் அவதையே ஆதிகாலத்திலிருந்த இலக்கியமாக மாறியிருப்பதைக் கண்டுபிடித்த பிறகு நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.