book

குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது

Kuliyalaraiku Veliye Satham Kettukondirukirathu (Short Stories)

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அரவிந்தன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788189359331
Add to Cart

மௌத்திலிருந்து சப்தங்களை உருவாக்கும் கதைமொழி வாழ்வின் மர்ம்மான அடுக்குகளுக்குள் மேற்கொள்ளும் முடிவற்ற பயணமாக வாசிப்பனுபவத்தை உணர வைக்கும் இச்சிறுகதைகளில் தென்படும் எளிமையின் தீவிரம் உக்கிரமானது. வீடு என்னும் வெளி தரும் பாதுகாப்பு பற்றிய கற்பனைகளைக் குழந்தையின் கரங்களைக் கொண்டு அழிக்க முற்படும் அரவிந்தனின் கதைகள் வாசகரின் பள்ளியறைகளுக்குள் பாம்புகளைத் தவழவிடுகின்றன. வரவேற்பறைகளில் மிருகங்களை நடமாடவிடுகின்றன. கொடுங்கனவுகளால் சூழப்பட்ட யதார்த்தத்தை எதிர்கொள்ளவியலாத திணறலாக வாசிப்பனுபவத்தை மாற்றும் நுட்பமே அரவிந்தனைத் தனித்துவம் மிக்க ஒரு சிறுகதைக் கலைஞராக முன்னிறுத்துகிறது.