book

நான் ஏன் தந்தையைப்போல இருக்கிறேன் (old book - rare)

Naan enn Thanthaiyaipol Irukiraen

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். லூக்னிக்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :334
பதிப்பு :2
Published on :1986
குறிச்சொற்கள் :கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
Out of Stock
Add to Alert List

பூனைகள் பூனைக்குட்டிகளையும், சிங்கங்கள் சிங்கக் குட்டிகளையும் முயல் குட்டிகளையும்  ஏன் ஈனுகின்றன?

மானிடக் குழந்தைகள் தோற்றத்தில் (மட்டுமின்றிக் குணத்திலும், மனப்பாங்கிலுமகூட) அவற்றின் பெற்றோர்களை ஒத்திருப்பது ஏன்?

இரட்டையர் ஏன் ஒரே மாதிரியாகவோ முற்றிலும் வேறு பட்டோ உள்ளனர்?

சில குழந்தைகள் கோர உருவுடன் பிறப்பது ஏன்?

மனிதனால் தாம் விரும்பும் விதத்தில் விலங்குகளையும், தாவரங்களையும் உண்டாக்க முடியுமா?

இது போன்ற கேள்விகளே இந்நூலின் களமாக அமைகிறது. இந்நூல் மரபியலில் முதன்மையான கண்டுபிடிப்புகளுக்கு இட்டுச் சென்ற ஆராய்ச்சிகளையும், ஆராய்ச்சியாளர் முன்தோன்றிய இடர்பாடுகளையும் விவாதித்து, மரதொகுப்புத் திறத்தையும் அதை எவ்வாறு மாற்றுவது என்பது பற்றியும் ஆராயும் விஞ்ஞானிகளைப் பற்றியும் கூறுகிறது.  தாமே ஒரு புகழ்பெற்ற உயிரியலாளராக உள்ள ஆசிரியர் ஆய்வுக்கூடங்கள், பண்ணை வயல்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றிற்கு அழைத்துச் சென்று நவீன மரபியலின் விரிவான களம், அனைத்தையும் அவர் கண்முன்னே காட்டுகிறார்.