book

தாமுவின் கின்னஸ் சாதனை சமையல் சைவம்

Dhamuvin Guinness Sathanai Samaiyal - Saivam

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தாமோதரன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

2010 ஆண்டு டிசம்பர் மாதம் 21ந் தேதி சென்னை சவேரா ஓட்டலில் காலை 8.00 மணிக்குத் துவங்கியது இவரது சாதனை. 24 மணி, 30 நிமிடம், 12 விநாடிகள் மொத்தம் 617 சமையல் செய்முறைகள், செய்த உணவுப் பதார்த்தங்களின் எடை 199 கிலோ. நிமிடங்களில் செட் செய்து தயாரிக்கக் கூடிய மைக்ரோவேவ் ஓவனில்லை. ஆறு காஸ் அடுப்புகளில் தான் உணவு தயார் செய்தாக வேண்டும். ஆறு அடுப்புகளும் தொடர்ச்சியாக எரிய வேண்டும். உணவுப் பதார்த்தங்களும் சாப்பிடக் கூடியதாக இருக்க வேண்டும். ஆனால், அனைத்து செய்முறைகளுமை மிகவும் சுவையானதாக இருக்கவே ஆச்சரியப்பட்டுப் போனவர் லண்டனிலிருந்து வந்த கின்னஸ் நடுவரான லூசியா சினி காக் தான்.