book

தேவதைகளின் தேவதை

Devathaigalin devathai

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தபூ சங்கர்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :123
பதிப்பு :7
Published on :2009
ISBN :9788189780449
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, காதல், நினைவுங்கள்
Out of Stock
Add to Alert List

உலகம் எட்டு பக்கம் காற்றாலும் எல்லா பக்கமும் காதலாலும் சூழப்பட்டிருக்கிறது. காதலின் கைகள்தான் பூமிப்பந்தை சுழற்றிக்கொண்டு இருக்கின்றன. ஆதாம் ஏவாள் கடித்த ஆப்பிள் இன்னும் தீரவேயில்லை. கடிக்கக் கடிக்க குறையாமல் வளர்ந்துகொண்டே இருக்கிறது காதல் ஆப்பிள்.
கடவுளையே காதலனாக்கியது ஆண்டாளின் காதல். தன் காதலி செல்மா கராமி இறந்த பிறகும் அவள் கல்லறை வழியே செல்பவர்களைப் பார்த்து 'பாதம் அதிராமல் செல்லுங்கள்... என் காதலியின் தூக்கம் கலைந்துவிடப் போகிறது' என்று பாட வைத்தது கலீல் ஜிப்ரானின் காதல். பெரும் செல்வங்களை விட்டுவிட்டு வறுமையிலும் காதலைக் கொண்டாடியது ஜென்னி மார்க்ஸின் காதல். காற்று புகாத இடங்களிலும் காதல் நுழைந்துவிடும். காதல் தீரும் இடத்தில் காலம் உறைந்துவிடும்.

காதலின் கண்களுக்குத்தான் கலைடாஸ்கோப்பில் வானவில் தெரியும். ஒரு குடம் நீரூற்றி ஓராயிரம் பூ பூப்பது காதல் செடியில்தான். காதல் மனதால்தான் பனித்துளியில் வானம் பார்க்க முடியும். காதல் சில நேரங்களில் அழகான முட்டாள்தனம், சிலநேரங்களில் அடம் பிடிக்கும் குழந்தைத்தனம்.

அதனாலென்ன... மழையையும் இசையையும் ரசிக்க காரண காரியங்கள் எதற்கு? காதல் தரும் சின்ன சின்ன சந்தோஷங்களில்தான் வாழ்க்கை நதி இன்னும் ஈரம் காயாமல் ஓடிக்கொண்டு இருக்கிறது. 'ஆதலினால் காதல் செய்வீர்' என கட்டளையிட்டான் பாரதி.

தபூசங்கர் பெருங்காதலனாக இருக்கிறார். காட்டு நீர்ச்சுனை போல அவரது பேனாவிலிருந்து காதல் பெருகிக்கொண்டே இருக்கிறது. ஒரே நேரத்தில் குழந்தைமையும் தெய்வாம்சமும் கொண்ட காதலை எழுத்தாக்கியிருக்கிறார்.