book

வயல் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் எலிக்கட்டுப்பாடு

Vayal Matrum Semippu Kidangukalil Elikkattuppadu

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் மூ. சாந்தி, முனைவர் இரா. நளினி, முனைவர் இரா. இராஜேந்திரன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :102
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

உலக அளவில் எலிகளில் சுமார் 500 வகைகள் உள்ளன. நமது நாட்டில் இவற்றின் எண்ணிக்கை சுமார் 500 கோடி ஆகும். இது நமது நாட்டின் மக்கள் தொகையைப் போல் சுமார் 5 மடங்கு அதிகமாகும். இவற்றால் ஆண்டொன்றிற்கு சுமார் 25 இலட்சம் டன் தானிய வகைகள் சேதம் அடைவதாக கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 118 வகை எலிகள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இவை வளரும் பயிர்களை மட்டுமின்றி, சேமிப்புக் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அனைத்து தானியங்களையும் தின்று சேதம் உண்டாக்குகின்றன. மேலும் அவை தின்று சேதம் விளைவிப்பதைப்போல் 20 மடங்கு அளவு உணவை அவற்றினுடைய புழுக்கைகள், சிறுநீர், உரோமங்கள் முதலியவற்றால் பெரிதும் பாழ்படுத்துகின்றன. ஓர் எலி தன் வாழ்நாளில் 5 லிட்டர் சிறுநீரும், 10 ஆயிரம் புழுக்கைகளையும் வெளியேற்றுகிறது. உதிரும் முடிகள் ஐந்து கோடிகள் ஆகும். இதனால் ஏற்படும் இழப்பின் மதிப்பு சுமார் ரூபாய் 2500 கோடி ஆகும்.