book

தமிழ் ஒளியின் கவிதையும் வாழ்வும்

Tamil Oliyin Kavithaium Valvum

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செ.து. சஞ்சீவி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2000
ISBN :9798177358673
Add to Cart

தமிழ்க் கவிதை மரபில் பாரதிக்குப் பிறகு ஒரு 'மகாகவி இன்னும் தோன்றவே இல்லை என்று சமூக ஆய்வாளர்களும், சிந்தனையாளர்களும் கூட ஆதங்கப்படுவதுண்டு. ஆனால் அப்படி ஒரு 'கவி' தமிழகத்தில் வாழ்ந்து இயங்கியிருந்தும் தமிழுலகம் அறியாதிருப்பதும் பேசப்படாததும் வரலாற்றுத் துயரம். பாரதி போன்றே வாழ்ந்து போராடி மடிந்த கவிஞர் தமிழ் ஒளி, சிறந்த பொதுவுடைமைக் கவிஞர். வர்க்கப் போராளி, புரட்சியாளர், கட்சி தடை செய்யப்பட்டு, நெருக்கடி நிலவிய காலத்தில் 'ஜனசக்தி' க்கு பதிலாக 'முன்னணி' இதழை கவிஞர் குயிலனுடன் இணைந்து முன்னின்று நடத்தியவர். தமது சொந்த முயற்சியில் மார்க்சிய தத்துவத்திற்கு என ஒரு தத்துவார்த்த பத்திரிகை 'ஜனயுகம்' என்ற பெயரில் நடத்தினார். வட சென்னையில் தொழிலாளர்களும், கூலி வேலைக்காரர்களும் வாழ்க்கை நடத்திய பகுதிகளில் அவர்களுடன் வாழ்ந்து இயக்கம் கட்டியவர். அவர்களையே பாடியவர் கவிஞர் தமிழ் ஒளி. அவருடைய கவிதைகள் சத்தியமானவை; வர்க்கப் போராட்டங்களுக்கு மத்தியில் உதித்தவை. அவற்றைப் பின்புலமாகக் கொண்டு வெளிப்பட்டவை. சீனப் புரட்சி, ரஷ்யப் புரட்சி, 'மேதின எழுச்சி, தமிழகத் தொழிலாளர் போராட்டங்கள் என்று அனைத்து வர்க்கப் போராட்டங்களையும் தமது கவிதையின் உள்ளடக்கமாக கொண்டவர். அதன் மூலம் அணையா பெருநெருப்பாய் கனன்று கொண்டிருந்தவர்; இருப்பவர். அவருடைய படைப்புகள் சாகா வரம் பெற்றவை. மானுடம் உள்ளளவும் பேசப்படும்.