book

சங்க இலக்கியம் அகநானூறு மூலமும் தெளிவுரையும்

Sanga Ilakkiyam Agananuru Moolamum thelivuraiyum

₹500
எழுத்தாளர் :வ.த. இராமசுப்பிரமணியம்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :688
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

இந்நூலைத் தொகுத்தவர் உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திர சன்மர் ஆவர் எனவும், தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி எனவும் அறியப்படுகிறது. இப்பாடல்கள் அனைத்தும் ஆசிரியப் பாவால் ஆனவை. எல்லாப் பாடல்களும் நிறைவாகப் பெறப்பட்டது. தமிழுலகம் செய்த நற்பேறு எனலாம்.  இப்பாடல்கள் சந்தச்சுவையும் இலக்கியச் சுவையும் நனி கொண்டு விளங்குவன. 158 புலவர்களால் பாடப்பெற்றவை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்து திணைகளும் அவற்றின் ஒழுக்கங்களும் நிலவப்பெற்றவை. தமிழக மன்னர்களின் வரலாற்றுச் செய்தியும் பாடல்களில் இடம்பெற்றுள்ளமையால் தமிழக வரலாற்றினையும் ஓரளவு அறியலாம். இவ்வரலாறு தனியாகத் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது