book

தமிழர் வீரம்

Tamilar Veeram

₹42+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா.பி. சேதுபிள்ளை
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :111
பதிப்பு :12
Published on :2007
ISBN :9788183794084
Add to Cart

'தமிழர் வீரம்' என்னும் நல்லூரைத் தொகுதி வரப்பெற்றேன்; படித்து உவகையுற்றேன். இவ் வினிய உரைச் செய்யுள் எழுதிய புலவர், சென்னைப் பல்கலைக் கழகத் தலைவராம் திரு.ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள். 'சொல்லின் செல்வர்'' என வளமலி புலமை இளந்தமிழுலகு பாராட்டும் இப் பேராசிரியர் இனிய எழுத்தாளர்; இன்சொற் பேச்சாளர். இவர்கள் உரை கேட்டு மகிழாத தமிழர் இரார். இவர்கள் இயற்றும் நூல் எதுவும் தமிழகம் முழுவதும் செல்லும் நாணயம்; நூல் நோட்ட வண்ணக்கர் மதிப்பு பாராட்டும் வேண்டாமல் செலாவணியாகும் கலா உண்டியல். இந் நூலுக்கு முகவுரை எழுதித் தகவுபெறுமாறு என்னைத் தூண்டியது என்பால் இவர்கள் கொள்ளும் அன்பைக் காட்டும்.