book

கந்தன் கதை கேளுங்கள்

Kanthan Kathai Kelungal

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பரம சுகிர்தன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :171
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788189780005
குறிச்சொற்கள் :தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
Add to Cart

'ஸ்காந்தம்' என்று ஒரு மதமே உண்டு. கந்தனை மாத்திரமே வணங்கி பூவுலக வாழ்க்கையின் சுகங்களையும் நிம்மதியையும் பெற்று வாழ்பவர்கள் கந்தனின் பக்தர்கள். இப்போது இருக்கும் அவசரமான உலகத்தில் கடவுளைப் பற்றி சிந்திப்பதற்கான நேரம் குறைந்துவிட்டது.
அதனாலேயே, பெருமை மிக்க நம் நாட்டின் புராண இலக்கியச் செல்வங்களைப் பற்றிய பரிச்சயம் இல்லாமல் இருக்கிறது இன்றைய தலைமுறை.

வாசக பெருமக்களுக்கு ஈர்ப்பு ஏற்படுத்தும் வகையில் கந்தன் கதையைச் சொன்னால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. அவள் விகடனில், எளியருக்கு எளியனான முருகனைப் பற்றி, 'கந்தன் கதை கேளுங்கள்!' என்ற எளிமையான தலைப்பில் இந்தத் தொடர் வெளியாயிற்று.

தொடராக வந்தபோதே கதையின் வீறுகொண்ட நடைக்காகவும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இடம்பெற்ற துதிப் பாடல்களுக்காகவும் நிறைந்த வரவேற்புப் பெற்றது. வாசக பெருமக்களின் ஆர்வமே இப்போது இதைத் தனிப் புத்தகமாகக் கொண்டுவர ஊக்கம் கொடுத்திருக்கிறது.

அற்புதமான கற்பனைகளுக்காகவும் இருக்கிற வாழ்க்கையை இன்னும் மேம்பாட்டோடு வாழ்வதற்கான கருத்துகளுக்காகவும் கொண்டாடப்படுபவை நம் ஆன்மிக இலக்கியங்கள். அவற்றை மறுபடி அறிமுகப்படுத்தும் காரியத்தின் ஒரு படிதான் பரம சுகிர்தனின் இந்த நூல். ஓவியர் ஸ்யாம் வரைந்த எழிலான ஓவியங்கள் கந்தனுக்குப் பெருமை சேர்க்கின்றன.

பக்திப் பரவசத்தோடு இந்த நூலைப் படித்து உங்கள் வழக்கமான ஆதரவைத் தருவீர்கள் என்று நம்புகிறேன்.