book

ஏழுதலை நகரம்

Alu Thalai Nagaram

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :231
பதிப்பு :1
Published on :2005
குறிச்சொற்கள் :குழந்தைகளுக்காக, பாம்பு, பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், தொகுப்பு
Out of Stock
Add to Alert List

மீண்டும் குழந்தையாகிற ஆசை யாருக்குத்தான் இல்லை! நிலா பார்க்கக்கூட நேரமில்லாமல், அவசரமும் தீராத தேவைகளுமாய் ஓடிக்கொண்டே இருக்கிற இந்த உலக வாழ்க்கையிலிருந்து தப்பித்துச் சென்றுவிட ஒரு மாயக் கம்பளம் கிடைத்துவிடாதா என்ற ஏக்கம் எல்லோரிடமும் உண்டுதானே? சதா வாகனங்கள் இரைந்து கொண்டே இருக்கிற தார்ச்சாலை சட்டென்று ஒரு புல்வெளியாக மாறிவிடாதா? வண்ணங்கள் மாறிமாறி துரத்திக்கொண்டே இருக்கும் சிக்னல்கள் பொசுக்கென்று ஒரு மரமாகி பூத்துவிடாதா? இப்படிப்பட்ட கனவுகள் இல்லாதவர்கள்தான் யார்?
நம் எல்லோருக்காகவும் எஸ்.ராமகிருஷ்ணன் எழுப்பியிருக்கிற சுவாரஸ்யமான கனவு நகரம்தான் 'ஏழுதலை நகரம்'!

காசு கொடுத்து கிளியைப் பேசச் சொல்லும் நமது உலகிலிருந்து முற்றிலும் மாறுபட்டது 'ஏழுதலை நகரம்'. அங்கே இயல்பாகவே பேசும் பறவைகள் வாழ்கின்றன. உதிராத பூக்கள் சிரிக்கின்றன. மழைக்கால சாயங்காலத்தில் வந்து போகும் வானவில்லைப் போல சுவடுகள் இல்லாமலும், காற்றைப் போல சுமைகள் இல்லாமலும் அதிசய மனிதர்கள் வந்து போகிறார்கள். அடுக்கடுக்கான அதிசயங்களும் ஏராள ஆச்சரியங்களும், முடியாத சுவாரஸ்யங்களும், அழகிய புதிர்களும் சாகஸங்களுமாய் நீளும் ஏழுதலை நகரத்துக்குள் நுழைந்துவிட்டால் பெரியவர்கள்கூட குழந்தைகளாகிவிட வேண்டியதுதான்.

சுட்டிகளுக்கோ நினைவில் கல்வெட்டாகி நிற்கக்கூடிய அற்புத அனுபவம் இது. பக்கத்துக்குப் பக்கம் அத்தனை சந்தோஷத்தை அளிக்கக்கூடிய குழந்தைகளுக்கான புதுவிதமான நாவல் இது. எஸ்.ராமகிருஷ்ணனைப் பற்றி புதிதாக அறிமுகம் வேண்டியதில்லை.

விகடனில் வெளிவந்த 'துணையெழுத்து' மூலமாகவும் தன் பிற படைப்புகள் மூலமாகவும் உலகத் தமிழர்கள் மனதில் இடம் பிடித்த இனிய படைப்பாளி. 'ஏழுதலை நகரம்' அவரது எழுத்தின் புதுமைக்கு இன்னொரு உதாரணம். இந்த நாவலைப் படிக்கும்போது எனக்குக் கிடைத்த சந்தோஷமும், மனம் துள்ளும் மகிழ்ச்சியும் உங்களுக்கும் கண்டிப்பாகக் கிடைக்கும்.அதிசய நகரம் வரவேற்கிறது. வருக... வருக!