book

கோவணாண்டி கடிதங்கள் பாகம் -2

Kovanandi Kadithangal (Part 2)

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வீயெஸ்வி
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :158
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184762907
குறிச்சொற்கள் :வேளாண்மை, உழவுத் தொழில், கால்நடைகள், உழவர்
Add to Cart

பச்சைத்துண்டு நாட்டாமை!

உடுக்க உடை, உண்ண உணவு... இன்றைய விவசாயி உட்பட அனைத்துத் தரப்பு மக்களும் போராடுவது இவற்றுக்காகத்தான். ஆனால், மனம் நிறைய அமைதியைத்தான் பெறமுடியவில்லை!

நம்நாடு, அதநவீன தொழில்நுட்பங்களில் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், விவசாயத் துறையில் இன்னமும் பின்தங்கித்தான் இருக்கிறது.

'இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள்தான்' என்று சொல்லப்பட்டாலும், கிராமத்து விவசாயப் பெருமக்களுக்கு உதவுவதில் இன்றைய மத்திய/மாநில அரசுகள் பெரிதும் தயக்கம் காட்டி வருகின்றன.  விவசாயம் வீரியம் அடைவதற்கான நடவடிக்கைகள் எதையுமே எடுக்காத்தால், விவசாயம் வீழ்ச்சி அடைந்து வருவதோடு, விலைவாசியும் விண்ணை முட்டிக்கொண்டு இருக்கிறது.

விவசாயத்துறையில் உள்ள குறைபாடுகளை கோடிட்டுக்காட்டி, அதனோடு தொடர்புடைய ஒவ்வொரு அரசியல்வாதியையும், அதிகாரியையும் வார்த்தை என்கிற சாட்டையால் விளாசித் தள்ளியிருப்பதோடு, ஆதங்கம், ஆக்ரோஷம், ஆற்றாமை, வருத்தம், பாராட்டுதல்... இப்படி தன் உணர்வுகளை ஊரறியப் பதிவு செய்பவர்தான் பச்சைத் துண்டு நாட்டாமை கோவணான்டி.

வயலில் வாழ்க்கையைத் தொலைத்து விட்டு வயிறு நிறைவதற்கான வழியைத் தேடும் விவசாயிக் கூட்டத்தின் பரிதாப நிலையை, இன்றைய சமுதாய, அரசியல் பிரமுகர்களுக்குச் சுட்டிக்காட்டி பசுமை விகடனில் வெளியான கடிதங்களைத் தொகுத்து, ஏற்கனவே முதல் பகம் வெளியிட்டோம்.  அந்த நூலுக்கு கிடைத்த அமோக ஆதரவைத் தொடர்ந்து இப்போது இரண்டாம் பாகம் உங்கள் கரங்களில்!

உழவர்களில் உண்மை நிலையை உலகுக்கு எடுத்துரைக்கும் அரிய நூல்களில் இதுவும் ஒன்று.

-ஆசிரியர்