book

பேசத் தெரிந்து கொள்ளுங்கள்

Pesa Therindhu Kollungal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்வாமி
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :128
பதிப்பு :2
Published on :2009
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Out of Stock
Add to Alert List

பிராணிகளில் பேசத் தெரிந்தவன் மனிதன் மட்டுமே. பிராணிகள் என்றால் மிருகங்கள் என்றே எண்ணுகிறோம்.அப்படியில்லை.பிராணன் இல்லாத ஜீவராசிகளே இல்லை என்பதால் மனித இனமும் பிராணியே.ஆனால் சமூகப் பிராணி. பேசக்கூடியவனாக இருப்பதனாலேயே அவனை மற்ற உயிர்களிலிருந்து பிரிந்து எண்ணுதல் நடக்கிறது. பேச்சாலும் சிரிப்பாலும், மிருகங்களிலிருந்து உயர்ந்தவனாக மனிதன் இருக்கிறான். அதாவது உணர்வுகளை எண்ணங்களாக எழுப்பி மொழியிலமைத்துப் பேச்சாகக் குரலோசை ஓலித்து பிறருக்கு அறிவிக்கக்கூடியவனாக இருக்கிறான். இதையே பேசத் தெரிந்தவனாக மனிதன் இருக்கிறான் என்று இங்கு குறிப்பிட்டோம்.