மார்க்ஸ் அம்பேத்கர் தொடரும் உரையாடல்
Maarks Ambeathkar Thotarum Uraiyaatal
₹240+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :D. ராஜா, N. முத்துமோகன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :236
பதிப்பு :1
Published on :2021
ISBN :9788123441061
Add to Cartஇந்தியச் சமூக முன்னேற்றத்தின் அனைத்துப் பரிமாணங்களும் பல நூற்றாண்டுகளாக சாதி வர்க்க அமைப்புகளுடன் பிரிக்க முடியாமல் பிணைக்கப்பட்டுள்ளன. உலக நாடுகளையும், அவற்றின் வரலாறுகளையும் முன்னேற்றப்பாதைகளில் வழிநடத்திய, வடிவமைத்த பல கருத்தியல்களுக்கு இந்தியாவின் சாதி வர்க்க சமூக அமைப்பு பெரும் சவாலாக இருந்துள்ளது, உலகின் மிகச்சிறந்த சிந்தனையாளர்களான கார்ல் மார்க்ஸ் மற்றும் டாக்டர் அம்பேத்கரின் சிந்தனைகளும், கருத்தியல்களும் இன்று இந்தியாவாக உருவாகி யிருக்கும் தேசத்திற்கு வடிவம் கொடுத்தன, வெவ்வேறு இடங்களில் தோன்றினாலும், இவை ஒரே குறிக்கோளைக் கொண்டவை. சுரண்டல் இல்லாத சமத்துவ நிலை, ஒவ்வொரு தனிநபரின் சுதந்திரத்தை மதிக்கும் மாண்பு மற்றும் முன்னேற்றத்தின் பலன்கள் எல்லோருக்கும் சமமாக சென்றடையும் சூழல் போன்றவற்றை உள்ளடக்கிய சமூகம் அது. இவற்றை முன்வைக்கும் இவ்விரண்டு கருத்தியல்களும் இன்றும் பொருத்தமானவை. ஆனால், இருபத்தியொன்றாம் நூற்றாண்டுக்குள் இந்தியா நுழைந்தபோது, 'நவீன' இந்தியா மேலும் அதிக பிரிவினைகள் கொண்ட நாடாக, சுரண்டலும், சமத்துவமற்ற நிலையும் அதிகரித்த இடமாக இருக்கிறது, இந்த இன்றையச் சூழலை கருத்தில் கொண்டு மார்க்ஸ் மற்றும் அம்பேத்கரின் கருத்தியல்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும்போது, இந்த இரண்டு பெரிய சிந்தனையாளர்களின் சிந்தனைகளும், கருத்துகளும் இன்று எவ்வளவு பொருத்தமானவை என்பது தெளிவாகிறது. இந்தியச் சமூகத்தை புரிந்துகொள்வதற்கு அம்பேத்கர் ஆற்றிய பங்கை இந்தியாவில் கம்யூனிஸ்டு இயக்கம் அங்கீகரித்துள்ளது. இந்த நாட்டின் ஒடுக்கப்பட்ட அனைவரும் சமத்துவக் குடிமக்களாக வாழ்வதற்கு தேவையான வழிமுறைகளையும், நெறிகளையும் கொண்டு வந்தவரும் அம்பேத்கர் என்பதையும் இடதுசாரிகள் கண்டுகொண்டனர். மார்க்சியக் கருத்தியலுக்கும் அம்பேத்கரியக் கருத்தியலுக்கும் இடையேயுள்ள ஒற்றுமைகளையும், அவற்றின் பொருத்தப்பாடு களையும் கருத்தில் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம், இரண்டு சிந்தனைகளும் தோன்றிய மற்றும் பெறப்பட்ட வரலாற்றுச் சூழல்களை ஆய்வு செய்கிறது; சமயம் மற்றும் சாதியின் சமூக அந்தஸ்த்தையும், பங்கையும் கணக்கில் கொள்கிறது. மேலும், வர்க்க - சாதி உறவுகளையும், பண்டைச் சூழல்களுக்கும், இன்றையச் சூழல் களுக்கும் இடையேயான வேறுபாடுகளையும், இன்று பேசப்படும் அடையாள அரசியலில் பொதிந்திருக்கும் வர்க்க, சாதி நலன்களையும் ஆய்வுக்குட்படுத்துகிறது. சிறந்தவொரு உலகைப் படைக்க இந்த இரண்டு கருத்தியல்களும், இயக்கங்களும் இணைந்து முன்னோக்கிச் செல்ல முடியுமென்பதை தெளிவாக்க முடிவுரைப் பகுதி முயல்கிறது.