சண்டால பிக்குணி
Santaala Pikkuni
₹36₹40 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நெல்லை சு. முத்து, குமாரன் ஆசான்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :72
பதிப்பு :1
Published on :2003
Add to Cartமலையாள மகாகவி குமாரனாசானின் சண்டாலப் பிக்குணி என்ற குறுங்காவியத்தைக் கவி மாமணி நெல்லை சு. முத்து அவர்கள் மூலத்தின் சுவை குன்றாமல் கவிதையில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார். அத்துடன் மலையாள மூலத்தையும் தமிழெழுத்தில் எழுதிச் சேர்த்துள்ளார். இதோடமையாது மூலக்கதைச் சுருக்கம், மொழிபெயர்ப்புச் சிக்கல்கள், யாப்பமைதி என்று பலவற்றைப் பற்றியும் ஒரு விரிவான முன்னுரையையும் சேர்த்துள்ளார். இவ்வாறு வெளியாகும் இப்பதிப்பு சாதாரண வாசகர்களுக்கு மட்டுமின்றி இதுபற்றி ஆழ்ந்து நுண்பொருள் காண விழையும் ஆய்வாளர்க்கும், திறனாய்வாளருக்கும் பெருவிருந்தாகும். கவிதை மொழிபெயர்ப்பு மிகவும் கடினமான செயல். மூலக் கவிதைக்கு நியாயம் செய்யாத மொழிபெயர்ப்புகளும் உண்டு. மூலக்கவிதையை விஞ்சும் மொழி - மொழிபெயர்ப்புகளும் உண்டு. மூலத்திலிருந்து விலகாமலும், அதேசமயம் சுவை கெடாமலும் மாழிபெயர்ப்புச் செய்வது கத்தி மேல் நடப்பது போன்று அல்லது இது ஒரு கழைக் கூத்துப் போன்றது. மொழிபெயர்ப்பில் மூல ஆசிரியனின் ஆளுமையோடு மொழிபெயர்ப்பாளரின் நேரடிக் கவிதை மொழிபெயர்ப்பதில் தோல்வி ஏற்படும்போது தழுவலே தேவலாம் என்ற நிலைக்குத் தள்ளப்படும் அனுபவங்களும் மொழி பெயர்ப்பாளனுக்கு ஏற்படுவதுண்டு. மொழிபெயர்ப்பாளன் எத்தனைதான் மூலத்திலிருந்து விலகாமலும், சுவை குன்றாமலும் மொழிபெயர்த்தாலும் பெறு மொழியில் அதன் வெற்றியை நிச்சயிக்க வேறு வேறு காரணிகள் உள்ளன. பண்பாடு, மொழி, இலக்கியம் இவற்றின் சரியான கூறுகளுக்கு பொருட் சிறப்பு மிகுகிறது அல்லது குறைகிறது. எனவே மொழிபெயர்ப்புகளை மதிப்பிடும்போது இதை நாம் மனதில் கொள்ளவேண்டும்.