தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு
Thamizh Ilakkiyath Thiranaayvu Varalaaru
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. பஞ்சாங்கம்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :183
பதிப்பு :6
Published on :2014
Add to Cart'தேரற்க யாரையும் தேராது' என்பது குறட்பாவின் முதலடி யாகும். தேர்ந்து தெளிவதனாலேயே பொருண்மையின் மாட்சியை நாம் பளிச்சிட்டுக் காட்ட முடியும். இலக்கியங்களைத் தேர்ந்து தெளிவுறுத்தும் நிறுத்த முறை உரையாசிரியர்பால் அங்கும் இங்கும் ஒளி வீசினாலும், இலக்கிய வாசிரியன் நெஞ்சத்துள்ளும் படைத்த மாந்தருள்ளும் நுண்ணிதாக நுழைந்து தம் முடிபுகளை விளக்கிக்காட்டும் இன்றைய திறனிகளுள் பேராசிரியர்க.பஞ்சாங்கம் சிறந்து மிளிரும் சிந்தனையாளராகத் திகழ்வதை மகிழ்ந்து பாராட்டுகிறேன். இளைஞர்கள் தம் பட்டப் பேற்றுக்காக ஆய்வுப் பொருண்மை களை நாடியலைவதை நாம் காண்கிறோம். நண்பர் க. பஞ்சாங்கம் மாணவராகப் பயின்ற நாள்முதல் தம் மனப்போக்குக் கவ்விய பொருளையே தேர்ந்து ஆய்ந்து ஆய்வுக் கட்டுரையை விரிவாக்கிப் படைத்து வெற்றி பெற்றார். தம் ஆய்வு நூலிற் குறித்த சில பகுதிகளை மட்டும் மேலும் சீராக்கிப் பட்டப் பரிசின் பயனாக இந்நூலைத் தமிழுலகிற்கு வழங்குகின்றார். புதுமை நாடும் தமிழுலகம் இப்புத்திலக்கியத்தை வரவேற்று மகிழும் என்று நம்புகிறேன். டாக்டர் க.பஞ்சாங்கம் திறனாய்வுத் துறையில் ஆழங்கால்பட்ட நிலையில் அரிய நூல்கள் பலவற்றைத் தொடர்ந்து எழுதி வழங்க வேண்டும் என்பது என் பெருவிருப்பமாகும்.