book

தண்ணீர் வைத்தியம்

Water remedies

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப்ரியா பாலு
பதிப்பகம் :காளிஸ்வரி பதிப்பகம்
Publisher :Kalishwari Pathippagam
புத்தக வகை :இயற்கை மருத்துவம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2015
Out of Stock
Add to Alert List

நம்முடைய வாழ்க்கையில் தண்ணீர் முக்கியமானது. அது இல்லாவிட்டால், நாம் உயிர் வாழ முடியாது. எந்த வகையிலாவது தண்ணீர் நமக்குப் பயன்படுகிறது. தண்ணீர் இல்லாமல் எந்த உயிரினமும் வாழ முடியாது என்பதிலிருந்தே, தண்ணீரின் முக்கியத் துவத்தை நாம் தெரிந்து கொள்ளலாம். தண்ணீரைப் பற்றி நமக்கு எவ்வளவோ விஷயம் தெரிந்து இருந்தாலும், நமக்குத் தெரியாத சில விஞ்ஞானப் பூர்வமான தகவல்களும் இருக்கிறது. தண்ணீர் மட்டும் இல்லாவிட்டால் பூமி என்ற அம்சமே தோன்றியிருக்க முடியாதுன்னு அறிவியல் அறிஞர்கள் சொல் கிறார்கள். நாம் வசிக்கிற இந்த பூமியில், முக்கால் பரப்புக்கு தண்ணீர் தான் இருக்கிறது. அது மட்டுமல்ல, பூமியின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதி பனிக்கட்டியால் மூடப்பட்டிருக்கிறது. எஞ்சிய நிலப் பரப்பிலேயும் நுண்ணிய துளிகளாக நீராவி பரவி இருக்கிறது. மனித உடலை எடுத்துக் கொண்டால், அதில் 71 சதவீதம் தண்ணீர்தான். பூமியின் சீதோஷ்ண நிலையை ஒழுங்கான முறையில் கட்டுப்படுத்தி வைத்திருப்பதும் தண்ணீர்தான். வெப்ப ஏற்புத் திறனும் நீருக்கு மிக மிக அதிகம். அதாவது அதிக வெப்பசக்தியை ஏற்றுக் கொண்ட பிறகுதான் தண்ணீர் சூடாகும். அதேபோல குளிரும்போது அதிக வெப்பசக்தியை வெளியேற்றி விடும். இது மட்டுமல்லாமல், இன்னும் ஏகப்பட்ட பயன்கள் தண்ணீரில் இருக்கிறது. தண்ணீரை முறையாக பயன்படுத்துவதன் மூலம் பல நோய்களை குணப்படுத்தலாம். ஆம் தண்ணீர் சிகிச்சை (Water Therapy) பல நோய்களுக்கு தீர்வாகும். அவற்றைப் பற்றி விரிவாக இந்நூலில் காணலாம்.