book

காற்றில் கரையாத நினைவுகள்

Kaatril Karaiyaatha Ninaivukal

₹145+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2020
Out of Stock
Add to Alert List

சுழன்று கொண்டேயிருக்கின்ற காலச்சக்கரம், கடந்த ஐம்பது ஆண்டுகளில் முன் எப்போதுமில்லாத அளவிற்கு வேகம்கொண்டு சுழன்றிருக்கிறது. எத்தனை மாற்றங்கள்! எத்தனை புதுமைகள்! வசதிகள்! வாய்ப்புகள்! இவையெல்லாம் இருந்தாலும், ஏதோ ஒன்று இல்லாத வெறுமையுணர்வு இதயத்தை எப்போதும் சூழ்ந்திருக்கிறது. புதிய பூக்கள் தோன்றியிருப்பதற்காகப் பூரிப்புக்கொள்வதா? அல்லது பழைய வேர்கள் பழுதுபட்டுவிட்டதற்காகப் பரிதவிப்பதா? என்று தெரியாத குழப்ப நிலை. இந்தக் காலமாற்றம் குறித்துப் பேசுவதுதான் 'காற்றில் கரையாத நினைவுகள்'. அன்றைக்கும் இன்றைக்குமான வித்தியாசங்களை எல்லாம் மிக நுட்பமாக அடையாளம் கண்டு ஆசிரியர் நமக்குக் காட்டுகிறார். ‘இன்று வீடுகள் பள்ளிகளின் நீட்சி; அன்றோ பள்ளி வீடுகளின் நீட்சி' என்பதுபோலச் சுருக்கமான சூத்திரமாக ஆசிரியர் கூறும் உண்மைகள் நம் நெஞ்சத்தைச் சுருக்கென்று தைக்கின்றன. வழுவி நழுவிக் கொண்டிருக்கின்ற வாழ்வியல் விழுமியங்களுக்கான ஒரு வரலா ஆவணமாக இந்நூல் திகழும்.கால நெடுங்கணக்கில் சமூகம் மற்றும் அறிவுசார் தளங்களில் ஒரு மௌனப் புரட்சியை நிகழ்த்தியிருக்கிற கடந்த அரை நூற்றாண்டைப் பற்றி அறிய விரும்பும் யாருக்கும் இது ஓர் அழகிய குறிப்புதவி நூல்.