book

ஔவை-யார்?

Auvai - Yaar?

₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம.பொ.சி
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :184
பதிப்பு :9
Published on :2021
Add to Cart

ஒளவையாரின் வரலாற்றை எழுத வேண்டுமென்ற ஆசை நெடுங்காலமாக எனக்கு இருந்து வந்திருக்கிறது. இந்த ஆசையை ஏற்படுத்தியவர் என் பெருமதிப்புக்குரிய நண்பர் ஒளவை தி. க. சண்முகம் ஆவார். வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்னும் நூலை நான் வெளியிட்ட பின்னர் ஒளவையாரைப் பற்றியும் எழுத வேண்டுமென்ற என்னுடைய நெடுங்கால ஆசை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. அதன் விளைவாக ஓய்வு கிடைத்த போதெல்லாம் ஔவையார் பற்றிய செய்திகளைச் சேகரித்து இந்த நூலை உருவாக்கியுள்ளேன். ஒளவையாரைப் பற்றிய தகவல்கள் முழுவதையும் இந்நூலில் சேர்த்துவிட வேண்டுமென்று யான் விரும்பி னேன். அந்த விருப்பம் எந்த அளவில் நிறைவேறி யிருக்கிறதோ யான் அறியேன். ஆனால், இதற்கு முன் ஒளவையாரைப்பற்றி வெளியான நூல்களிலே கிடைக்காத தகவல்கள் பலவற்றை இந்நூலிலே காண முடியும். ஒளவையாரின் வரலாற்றையும் அவர் பெயரால் உள்ள இலக்கியங்களையும் புலமைக் கண்கொண்டு ஆராய்ந்தால் போதாது. சாதி சமய மொழிப் பற்றுகளுக்கு அப்பாற்பட்டு, மனித சமுதாயம் முழுவதையும் மனத்திற் கொண்டு, அரசியல் - ஜனநாயகம் - சோஷலிசம் ஆகிய பண்புகளிலே உரைத்துப் பார்த்து ஆராய வேண்டும். இருபதாம் நூற்றாண்டுக்குத் தேவைப்படும் ஆராய்ச்சி இதுவேயாகும். இந்த முறையில் ஆராய்ந்துதான் ஔவை யார்? என்ற நூலை உருவாக்கியிருக்கின்றேன்.