book

மனித உறவுகள்

Manitha Uravukal

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.எஸ். உதயமூர்த்தி
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :144
பதிப்பு :36
Published on :2020
Add to Cart

மனித உறவுகள் மிக நுட்பமானவை. சிறு முகமலர்ச்சியில் கூட கண்களின் பாவத்தில் கூட ஒரு உறவின் தன்மையைப் புரிந்துகொள்ளலாம். நமது உறவை சிறு செயல்கள்கூட வெளிப்படுத்திவிடுகின்றன. வார்த்தைகளை மூடி மறைக்கலாம். ஆனால் நம் உணர்வுகளை மூடி மறைக்க முடியாது. உறவுகள் அறிவு பூர்வமாகப் பின்னப்படுவதில்லை ! உணர்வு எனும் வலையால் அவை விஸ்தரிக்கப்படுகின்றன. உணர்வுகளின் ஆழம்தான் உறவின் வலிமை. ஒரு பச்சிளங் குழந்தையைப் பார்க்கிறோம். எத்தகைய உறவு ஏற்படுகிறது? எத்தகைய உணர்வு நம்முள் எழுகிறது? யோசித்துப் பாருங்கள். நமது காதலியை அல்லது காதலனைப் பார்க்கிறோம். எத்தகைய உணர்வுகள் நம்மை ஆட்கொள்கின்றன? நம்மை முந்துகின்றன? எண்ணிப்பாருங்கள். ஒரு தலைவன் தான் காணும் லட்சிய உலகைப் பற்றிப் பேசுகிறான். ஏன் நாம் சிலிர்த்தெழுகிறோம்? எத்தகைய உறவுக்கு, தியாகங்களுக்கு நம்மைத் தயார் செய்துகொள்கிறோம்? ஏன்? ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள். கருணையின் வடிவான ஒரு ஞானியைத் தரிசிக்கிறோம். எத்தகைய உணர்வுகள் நம்முள் எழுகின்றன? ஞானிக்கும் நமக்கும் என்ன தொடர்பு ஏற்படுகிறது? ஆராய்ந்து பாருங்கள்.