book

பாரதி மறைவு முதல் மகாகவி வரை

Bharathi Maraivu Muthal Mahakavi Varai

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கார்த்திகேசு சிவத்தம்பி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :248
பதிப்பு :1
Published on :2008
ISBN :9188123413356
Out of Stock
Add to Alert List

பாரதி இயலின் மிக முக்கியமான கட்டங்களில் ஒன்று அவர் மறைவின் பின்னர். அவர் மகாகவியாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான இலக்கியச் சூழல் எவ்வாறு அமைந்தது என்பதுதான். முப்பத்து ஒன்பது வருட காலம் வாழ்ந்து அவர் கவிதைத் துறையிலும். அரசியல், சமூகத் துறையிலும் ஆற்றிய பணிகள் தமிழ் நாட்டினுள் தமிழ் இலக்கிய பாரம்பரியத்தினுள் எவ்வாறு உள் வாங்கப் பெற்றன? என்னும் வரலாறு உண்மையில் பாரதியின் மறைவின் பின்னரே தொடங்குகிறது. பாரதி முப்பத்தி ஒன்பது வயதிலே காலமாகிறார். அந்த வயதிலே காலமாகிற போது பாரதியினுடைய ஆற்றல்கள் எவையுமே பூரணத்துவம் அடையவில்லை. நிறைவு நிலையை எய்தவில்லை. தாகூர் போன்ற பழுத்த கனியாக அவர் மறையவில்லை. உண்மையில் அவர் ஒரு மலராக. மலரிலிருந்து தோன்றும் ஒரு காயாகவே அந்தச் சாதனை தமிழினை. இன்னொரு திசைக்கு. அது கால் வரை ஓடிவந்த திசையிலிருந்து இன்னொரு திசை முகத்தை நோக்கி பாய்ச்சுகின்ற ஒரு திருப்பமாக அமைந்தது. இதுதான் பாரதியின் சாதனை. இந்த சாதனையை தமிழ்நாடு உணர்ந்த வரலாறு இந்த நூலிலே சொல்லப்படுகிறது.