book

என்ன சொல்கிறாய் சுடரே

Enna Solkiraay Sutarea

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :தேசாந்திரி பதிப்பகம்
Publisher :Desanthiri Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789387484627
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
Add to Cart

என்ன சொல்கிறாய் சுடரே எனது பதினைந்தாவது சிறுகதைத் தொகுப்பு. வெவ்வேறு தருணங்களில் எழுதப்பட்ட இக்கதைகளை ஒருசேர வாசிக்கும் போது நெருக்கடியான தருணங்களில் மனிதர்கள் அதிகம் இயற்கையோடு நெருக்கம் கொள்வதையும் விந்தைகள் நடப்பது சாத்தியம் என நம்புவதையும் காணமுடிகிறது. எல்லா இதிகாசங்களிலும் நெருக்கடியான தருணம் ஒன்றில்தான் விந்தை சாத்தியமாகிறது. என்ன சொல்கிறாய் சுடரே கதையில் வரும் வெளிச்சமும் அதுபோன்றதே. அது இந்த தொகுப்பில் உள்ள கதைகள் யாவற்றிற்குமான வெளிச்சம். அப்படியொரு சிறுவெளிச்சமே இக்கதைகளை புதியதாக்குகின்றன. இந்தத் தொகுப்பில் ஆத்மாநாமையும் புதுமைப்பித்தனையும் கதாபாத்திரங்களாக்கியிருக்கிறேன். எனக்கு விருப்பமான ஆளுமைகளை கதையுலகில் இடம்பெறச்செய்வதும் அவர்கள் சார்ந்து ஒரு புனைவை எழுதுவதும் விருப்பத்திற்குரிய சவலாக இருந்தது. இரண்டு கதைகளும் மிகச்சிறந்த பாராட்டுதலை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறுதுயரங்களின்போது மனிதர்கள் அதிகம் கையறு நிலையை உணருகிறார்கள். தனிமைப்பட்டதாக நினைக்கிறார்கள். ஆறுதலுக்காக ஏங்குகிறார்கள். பெருந்துயரங்களில் மனிதர்கள் ஒன்று சேர்வது இயல்பாக நடந்துவிடுகிறது. இயற்கைபேரிடர்களின் போதும் அதன் பின்பும் மனிதர்களுக்குள் தானே இணக்கமும் நேசமும் உருவாகி விடுவதைக் கண்டிருக்கிறேன். இலக்கியம் பெரிதும் சிறுதுயரங்களில் வீழ்ந்த மனிதர்களை ஆற்றுப்படுத்தவே முயற்சிக்கிறது. பெருந்துயரங்களில் இருந்து கற்ற பாடத்தை உதாரணமாகச் சொல்கிறது. இக்கதைகள் மாயக்கற்பனைகளாகத் தோற்றமளித்தாலும் அதன் வேர்கள் யதார்த்த வாழ்வில் புதையுண்டிருப்பதை கவனப்படுத்த விரும்புகிறேன்.