book

குடிமக்கள் காப்பியம்

Kudimakkal Kaapiyam

₹54₹60 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :137
பதிப்பு :1
Published on :2010
ISBN :9798177358604
குறிச்சொற்கள் :தமிழ்காப்பியம், சங்ககாலம், பயண இலக்கியம், திறனாய்வு
Add to Cart

ஆங்கில இலக்கியங்களைச் சுவைத்து ஒதுவதற்கு ஆங்கில ஆசிரியர்களும் ஆங்கில நூல்களும் என்னைப் பழக்கியதனை நான் என்றும் மறக்க முடியாது. இந்தப் பழக்கம் தமிழ் இலக்கியங்களையும் அவ்வாறே ஓதத் தூண்டியது. அடிப்படை ஒற்றுமையே இங்கு ஆராய உதவுகிறது. காலத்திற்கும் நாட்டிற்கும் ஏற்ப எழுந்த மாறுதல்களைப் புறக்கணிப்பதும் பொருத்தம் ஆகாது. இந்தப் பழக்கத்தால் சிலப்பதிகாரத்தை ஒதியபோது எழுந்த என் எண்ணங்களைக் கட்டுரையாக இங்கே காணலாம். முயற்சி நன்றோ தீதோ உலகம் முடிவு கூறுதல் வேண்டும் . ஆனால் ஒன்று கூற வேண்டும் . இங்கு வரும் கருத்துக்கள் எனக்குத் தோன்றியது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழ் மாணவரோடு சிலப்பதிகார விருந்துகளைக் கூட்டுண்டு மகிழ்ந்த போதுதான் மாணவர்கள் முகப் பொலிவில் நான் கண்டவையே இவைகள். அவர்களே என் குருமார்கள். வாழ்க அவர்கள். - தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்.