book

உன் காதலால் உயிர் கொடு!

Un kaathalaal uyir kodu!

₹230+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரேவதி அசோக்
பதிப்பகம் :அன்பு இல்லம்
Publisher :ARIVU NILAYAM
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :412
பதிப்பு :1
Published on :2018
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Add to Cart

எம்.பி.ஏ. மாணவிகள் கல்லூரி வராண்டாவில் நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டிருந்த லிஸ்ட்டில் தங்கள் பெயரைத் தேடிக் கொண்டிருந்தார்கள். தான் தோற்றுவிடமாட்டோம் என்று தான் எத்தனையாவது இடத்தைப் பிடித்திருக்கிறோம் என்ற படபடப்புத்தான் அவளுள் நிறைந்திருந்தது. அதிலும் அத்தனைப் பெரிய லிஸ்ட்டில் அவள் பெயர் கடைசி வரை இல்லையென்றானதும் நெஞ்சுக்குள் சுருக்கென்று ஒரு வலி எழ, முணுக்கென்று வைரத்துளி பூத்தது நயனங்களில். ஆனால் அதை உள்ளுக்கிழுத்து, குழப்பத்துடன் பார்வையைச் சுழற்றியவள், முன் பக்கப் போர்டில் வாழ்த்துக்களுடன் தன் பெயர் இருப்பதைக் கண்டு ஓடியவள், இனிய அதிர்ச்சியில் திகைத்து நின்றாள். தான் முதல் மாணவியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறோம் என ஒரு நொடி தேகம் சிலிர்த்தது. அடுத்த நொடி சந்தோஷக் கூக்குரலிட்டாள்.