திருவாசகம் மூலமும் உரையும்
Thiruvasagam Moolamum Uraiyum
₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் பத்மதேவன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :376
பதிப்பு :3
Published on :2017
ISBN :9788190853507
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம்
Add to Cartஊனை உருக்கி உள்ளொளி பெருக்கி நம்மைத் தேனில் நனைய வைப்பவை மாணிக்க வாசகரின் திருவாசகப் பாக்கள்.
நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது ஒன்றேயும் இல்லை என்று இறைவனிடம் முழுவதுமாக ஆத்ம சமர்ப்பணம் ஆனவர்களை ஆனந்த பரவசத்தின் ஆழத்திற்கே அழைத்துச் செல்பவை இப்பாடல்கள்.
இந்நூல் திருவருளை அடைவதற்கான திசைகாட்டி.
துன்பக் கடலிலிருந்து கரையேறுவதற்கான கலங்கரை விளக்கம்.
முக்தியுலகிற்கு அழைத்துச் செல்வதற்கான ராஜபாட்டை
இந்த அருள்நூலுக்கு அழகான உரை எழுதியிருக்கிறார் கவிஞர் பத்மதேவன்.
இந்த உரை மாணிக்கவாசகின் மனப்போக்கோடு ஒத்து நடப்பது; ஒட்டிக் கிடப்பது. அந்தத் திருவருட்செல்வரின் உணர்வுகளெல்லாம் பிரபலிக்கும்படியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து, நுட்பமான உரையைச் செப்பமான முறையில் உரையாசிரியர் செய்தளித்திருக்கிறார்.
உணர்ந்து படியுங்கள். உருகிப் படியுங்கள்!
உட்கண் திறக்கும்! பேரின்ப உச்சம் கிடைக்கும்!