ஆதலினால் காதலன் ஆகினேன்
Aathalinaal Kathalan Aaginaen
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மணிகாந்தன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, காதல்
Add to Cartமணிகாந்தன் என்கிற கவிதை மனசுக்காரனின் இந்த 'ஆதலினால் காதலன் ஆகினேன்' தொகுப்பில் ஒவ்வொரு வார்த்தையிலும், ஒவ்வொரு வரியிலும் காதல் நிரம்பி வழிகிறது. சாதாரண வார்த்தைகள் கூட, காதல் ஆபரணம் பூட்டிக் கொண்டு தேவைதகளாக தென்படுகின்றன!
'கோடி கோடியாய்
என் கவிதைகளை
கொன்று குவிக்கத்தான்
தோண்டப்பட்டதோ
அவள்
கன்னக்குழி?'
என்று ஆரம்பிக்கிற மணிகாந்தனின் முதல் கவிதையில் ஆரம்பித்து கடைசிக் கவிதை வரை, காதல் அவரை எவ்வளவு தூரம், ஆட்கொண்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது. இவரை கவிதைக்காரனாக்கிய அந்தக் காதல் பெண்மணியை தேடிப்பிடித்த ஒரு பூங்கொத்தை பரிசாக அளிக்க விரும்புகிறேன்.
'எல்லோரும் தமிழ் பேசினார்கள்
தமிழாய் இருந்தது...
நீ பேசினாய்
அழகாய் இருந்தது!'
வெறும் வார்த்தைகளின் தொகுப்பென்றில்லாமல் ஒவ்வொரு கவிதையிலும் எதிர்பார்க்காத ஒரு பொருளை ரகிசியமாகப் புதைத்து வைத்திருக்கிறார் மணிகாந்தன். இந்த வித்தை எல்லோருக்கும் கைக்கூடி வருவதில்லை.
வாழ்த்துக்களுடன்,
கல்யாண் JE
திரைப்பட பாடலாசிரியர்