book

இனியவை நாற்பது இன்னா நாற்பது சிறுபஞ்ச மூலம் (மூலமும்.உரையும்)

Iniyavai Narpathu Inna Narpathu Sirupanja Moolam (Moolamum .Uraiyum)

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழ்ப்பிரியன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2007
குறிச்சொற்கள் :தமிழ்காப்பியம், சங்ககாலம், பழந்தமிழ்பாடல்கள்
Out of Stock
Add to Alert List

 இனிய பாடல்கள் நாற்பதைக் கொண்டிருப்பதால் இந்நூல் 'இனியவை நாற்பது '  -எனப் பெயர் பெற்றது. இந்நூலில் அறம், பொருள், இன்பம் ஆகிய உறுதிப்பொருள்களைப் பற்றி மிகவும் இனிமையாக எடுத்துரைக்கப் பெற்றுள்ளது. இது வெண்பாக்களால் ஆகிய நூலாகும்.இந்நூலை  இயற்றியவர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் ஆவார். இன்னா நாற்பது இந்நூல் கடவுள்  வாழ்த்து உட்பட நாற்பத்தொரு வெண்பாக்களை உடையது. ஒவ்வொரு பாடல் வரியிலும்  இது இது இன்னாத்து  என்று கூறப்பட்டுவதால் இந்நூல் இன்னா நாற்பது -எனப்  பெயர் பெற்றது. இன்னா நாற்பது  என்னும் இந்நூலின் ஆசிரியர் கபிலாராவார் . இவர் அந்தண குலத்தைச் சேர்ந்தவர் என்பது ;புலனழுக்கற்ற அந்தணாளன் என்று மாறோக்கத்து நப்பசலையார்  என்னும் சங்ககாலப் புலவர் இவரைப் பாராட்டியுள்ள வரியின் மூலம் அறியலாம். சிறுபஞ்ச மூலம் இந்த ஜந்து வேர்களால் தயாரிக்கப்படும் மருந்து உடல் நலத்தைக் காப்பது  போல, இந்நூலில் இடம் பெறும் ஒவ்வொரு பாடலில் உள்ள ஜந்தைந்து  கருத்துக்களும் மனிதர்களில்  மனநோயான அறியாமையைப் போக்கி அறிவொளி வீச்ச்செய்வனவாகும். எனவேதான் இந்நூலுக்குச் 'சிறுபஞ்ச மூலம் ' என்ற பெய்ர வந்தது. இந்நூல் 97  வெண்பாக்களைக் கொண்டதாகும்.

                                                                                                                                                  - பதிப்பகத்தார்.