book

காதல் படிக்கட்டுகள்

Kadhal padikattugal

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கட்டுரையாளர்கள்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :பொது
பக்கங்கள் :168
பதிப்பு :4
Published on :2007
ISBN :9788189780630
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, காதல், நினைவுங்கள்
Out of Stock
Add to Alert List

'காதல் படிக்கட்டுகள்' தொடர் ஜூ.வி_யில் வெளிவந்த நேரம்...
காதல், இளைஞர்களுக்கான உணர்வு மட்டுமல்ல என்ற உண்மையை நிரூபிக்கும் விதமாக எல்லாத் தரப்பினரிடமிருந்தும் அத‌ற்கு ஏகோபித்த‌ ஆத‌ர‌வும் வ‌ர‌வேற்பும் கிடைத்த‌து.

காத‌ல் என்ற‌ ச‌க்திவாய்ந்த‌ மூன்றெழுத்துக்க‌ளுக்குப் பின்னால் எவ்வ‌ள‌வு சுவையான‌, வித‌வித‌மான‌ அனுப‌வ‌ங்க‌ள்!

ப‌ற‌வைக‌ளின் ச‌ங்கீத‌த்துக்கும் வான‌த்தின் வ‌ர்ண‌ஜால‌த்துக்கும் இணையான‌ க‌வித்துவ‌மும் அழ‌கும் காத‌லுக்கு ம‌ட்டுமே உண்டு.

மக்க‌ளால் பெரிதும் அறிய‌ப்ப‌ட்ட‌ வி.ஐ.பி_க்க‌ள் ப‌ல‌ர், காத‌ல் குறித்த‌ த‌ங்க‌ள் எண்ண‌ங்க‌ளை, க‌ருத்துக்க‌ளை, அனுப‌வ‌ங்க‌ளை இந்த‌த் தொட‌ர் மூல‌ம் ல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ வாச‌க‌ர்க‌ளுட‌ன் ப‌கிர்ந்து கொண்ட‌ன‌ர். த‌ங்க‌ளை ம‌ல‌ர‌ வைத்த‌தும் நெகிழ‌ வைத்த‌துமான‌ வ‌சீக‌ரத் த‌ருண‌ங்க‌ளை வெளிப்ப‌டையாக‌ச் சொல்லியிருக்கிறார்க‌ள்.

காத‌ல் தேவ‌தையின் உயிரோவிய‌த்துக்குத் த‌ங்க‌ள் அனுப‌வ‌ங்க‌ளையே தூரிகைக‌ளாக்கி இவ‌ர்க‌ள் வ‌ண்ண‌ம் சேர்த்துத் த‌ர‌... முத்தாய்ப்பாக‌, அந்த‌ அழ‌கு ஓவிய‌த்தின் க‌ண்க‌ளைத் திற‌ந்துவைத்து உயிர்ப்பாய்ச்சும் உன்ன‌த‌மான‌ ப‌ணியைச் செய்துத‌ர‌ த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர் க‌லைஞ‌ரை அணுகினோம். உட‌னே ஒப்புக்கொண்டு, உண‌ர்ச்சித‌தும்ப‌ ஒரு குறுங்காவிய‌மே இய‌ற்றித் த‌ந்தார் அந்த‌ இல‌க்கிய‌க் காத‌ல‌ர்.

அவ‌ருக்கும் இந்த‌த் தொட‌ரில் ப‌ங்கேற்ற‌ என் ம‌திப்புக்குரிய‌ அனைவ‌ருக்கும் க‌னிவான‌ ந‌ன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜூ.வி. வாச‌க‌ர்க‌ளைச் சுண்டியிழுத்த‌ இந்த‌த் தொட‌ரை, ஒரு புத்த‌க‌மாக‌ வெளியிடுவ‌தில் ம‌கிழ்ச்சிய‌டைகிறேன். இந்த‌த் தொகுப்புக்குள் ப‌ய‌ண‌ம் செய்யும்போது நிச்ச‌ய‌ம் நீங்க‌ளும் ம‌கிழ்வீர்க‌ள் என்று ந‌ம்புகிறேன்.