book

இதுதாங்க பியூட்டி

Ithuthaanga Beauty

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வசுந்தரா
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2002
குறிச்சொற்கள் :உடல் ஆரோக்கியம், கீரைகள், பழங்கள், கிழங்கு வகைகள்,
Add to Cart

அழகான வாசகர்களுக்கு அநேக வணக்கங்கள் . இயற்கையில் எல்லோருமே அழகுதான். தான் அழகு இல்லை என்ற மனப்பான்மை யாருக்கும் வரக்கூடாது. இதனால் தன்னம்பிக்கை குறைந்துவிடும். நிறையபேர் அழகில்லாத காரணத்தாலோ, அல்லது அழகு குறைந்த மா,ணத்தாலே வாழ்க்கையையே வெறுத்துப் போயிருக்கிறார்கள். பல அழகு நிலையங்களிலும் சரி, அழகு சம்பந்தப்பட்ட புத்தகங்களிலும் சரி கடைப்பிடிக்க வேண்டிய குறிப்புகள் சாமானியர்களால் செய்ய முடியாததாக இருக்கும்.  மேலும் தற்பொழுது  சில அழகு நிலையங்கள் வசதி படைத்தவர்கள் மட்டுமே முழையும் படியான மாயத்தோற்றத்தையும் உண்டு பண்ணியுள்ளன. இயற்கையிலேயே ஏராளமான அழகு சாதனங்கள் இருக்கின்றன. அதை முறையாக பயன்படுத்தினால் சருமத்திற்கு எந்தவிதப்பாதிப்பும் இல்லை. அதையும் அளவோடு பயன்படுத்துவது நல்லது. அளவிற்கு அதிகமாக, அடிக்கடி உபயோகிப்பது ஒரு சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அவ்வப்போது அழகுக்கலை நபுணரின் ஆலோசனையின் பேரில் உங்களது சிகிச்சை முறையை வீட்டிலேயே தொடரலாம். நமது உடலையும் மனத்தையும் கோவிலாக மதித்து , அதைச் சரிவரக்கவனித்தால் எங்குமே நமக்கு வெற்றிதான்.

                                                                                                                                                     -வசிந்தரா.