நீரிழிவுக்கான ஸ்பெஷல் டயட்
Neerilivukana Special Diet
₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தாமோதரன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2006
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், உடற்பயிற்சி, உடலுழைப்பு
Add to Cartஉலகில் முதலிடத்தில் நீரிழிவு நோயாளிகள் அதிகமாக உள்ள நாடாக இந்தியா மாறி வருகிறது. diabetic capital ஆக இந்தியா மாறி வருவது குறித்து, இந்தியர்களாகிய நாம் கவலை கொள்ளத்தான் வேண்டும். நீரிழிவு என்பது நோயே அல்ல. அது ஒரு குறைபாடே ஆகும் . கணையம் சரியாக வேலை செய்யவில்லை என்றாலோ, கணையத்தில் குறைபாடு இருந்து ,இன்சுலின் சரியாக சுரக்கவில்லை என்றாலோ அல்லது குறைவாக இருந்தாலோ இந்நோய் ஏற்படுகிறது. இந்தியா பல துறைகளிலும் வளர்ந்து வருகிற நாடு காலம் மாற மாற உடலுழைப்பு, உடற்பயிற்சி செய்தல், நடைப்பயிற்சி செய்தல் அகியவை குறைந்துவிட்டது. அல்லது அறவேயில்லை எனவும் கூறலாம். உணவுப் பழக்கமும் அடியோடு மாறி வருகிறது. உனலுழைப்பு குறைதல், உடற்பயிற்சி, நடைப்பயிற்சி இல்லாதிருத்தல், உணவு முறையில் மாற்றம், பரம்பரை இவைகளும் நீரீழிவு நோய் வர ஒரு காரணமாகக் கருதப்படுகிறது. இருந்தாலும் நீரீழிவு எனப்படும் சர்க்கரை நோய் எதனால் ஏற்படுகிறது என்ற குறிப்பிட்ட காரணத்தை உலகளவில் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.சர்க்கரை நோய் கண்டவர்களுக்கு டயட் என்பது, அவரவரின் உடல் நிலை, உழைப்பு மற்றும் சர்க்கரையின் அளவைப் பொறுத்தும் மாறுபடும். ஒரு சிலர் கடினமான உழைப்பாளிகளாக இருப்பார்கள். அவர்களுக்கு பிறரைப்போல் உணவு கொடுக்க இயலாது. அதே போல் கொலஸ்ட்ரால், இரத்தக் கொதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கும், அவர்களின் உடல்நிலையைப் பருசோதித்து , உணவளிக்க வேண்டும். நீரீழிவு உள்ளவர்கள், அவர்களின் உடல்நிலைக்கும் ,சர்க்கரையின் அளவிற்கும் தகுந்தவாறு மருத்துவர், உணவியல் நிபுணரின் ஆலோசனைப்படி டயட் எடுத்துக்கொள்வது நல்லது.
- டாக்டர் பாலாஜி M.D.F.R.S.H.
- டாக்டர் பாலாஜி M.D.F.R.S.H.