book

காதலர்கள் சரணாலயம்

Kathalargal Saranaalayam

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நெல்லை செல்வம்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2003
குறிச்சொற்கள் :காதலர்கள் சரணாலயம், முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம்
Out of Stock
Add to Alert List

 காதலர்கள் சரணாலயம் புதினத்தில் பாத்திரப்படைப்புகளின் குணவியல்களை நெல்லை செல்வம் வித்தியாசமான முறையில்
கட்டமைப்பச்செய்திருப்பதைப் படிப்போர் உணர முடியும்.  கல்லூரி என்றாலே அது காதலர்கள் உற்பத்திச்சாலை என்பது இக்காலப்படைபபிலக்கியங்களின் எழுதா விதியாகி விட்டது. குறிப்பாகத் தமிழ்த் திரைப்படங்கள் இதை ஒரு பிரதான வழியாகவே
வைத்திருக்கின்றன. கல்லூரிப் பூங்காவில் பூத்த ஒரு காதல் மலர் காலதேவனின்  கரம்பட்டோ, சாபம் பெற்றோ காயம் பட்டுக்கசங்கிக் கருகி விழுவதற்கு நானும் உடன்படமாட்டேன். வாசகர்களாகிய நீங்களும் உடன்படமாட்டீர்கள. ஆனாலும் வினோவின் வாழ்க்கை வினாக்குறியாய் முடியும் நிலையில்  நம் விழிக்குளங்கள் நிறைகின்றன. ஒரு புதினத்தின் வெற்றிக்கு இது  ஒன்று போதாதா? காதல் என்பது விட்டில்  பூச்சி, விளக்கோடு விளையாடுகின்ற வெட்டி  விளையாட்டல்ல அது இரு ஆன்மாக்கள் ஒன்று பட்டு உறவு கொள்ளும் சரணாலயம். இந்த மலருக்கும் வாசம் இருக்கிறது.  என்று சூடிக்கொண்ட சுடர்கொடியே  உன்னால் தான் காகிதம் இங்கே காவியமாகிறது.என் வாழ்க்கையின் ஒளி விளக்கே திருமதி.ல.கன்னியே உன் கரங்களில் 'காதலர்கள் சரணாலயம் ய காணிக்கையாகிறது.

                                                                                                                                    - நெல்லை செல்வம்.