book

ஒளிர்நிழல்

Olirnizhal

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுரேஷ் பிரதீப்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788184937343
Add to Cart

நவீன சமூக மாற்றத்திற்கான அறைகூவல்கள் தொடங்கி நூறாண்டுகள் கடந்துவிட்டன. வரலாற்றின் அத்தனை ஊடுவழிகளையும் கண்டு சிந்தித்து முன்செல்வது எனும் பெரும் செயல் முன் அஞ்சி நிற்கின்றன இன்றைய நவீன மனங்கள். தடுமாற்றமும் நற்குணங்களும் கொண்ட ஒருவன், அத்தடுமாற்றங்களின் சுவடற்ற ஒருவனின் முன் நாவலுக்குள் திகைத்து நிற்பதை, நாவலுக்கு வெளியே நின்று பதைப்புடன் பார்த்து நிற்கிறான் மற்றொருவன். அவர்கள் அத்தனை பேரின் வழியாக உருவாகி வரும் ஒரு சித்திரத்தை வாசகனுக்கு அளிப்பதன் வழியாக அச்சூழலில் வாசகனையும் பங்குபெற வைக்கிறது இந்தப் படைப்பு. அனைத்தும் கலந்து புனைவுக்கும் நிகழ்வுக்கும் இடையில் உள்ள வெளி மறையும்போது நாவல் புதிய பரிமாணத்தைப் பெறுகிறது. ஒளிர்நிழல் எழுதி முடிக்கப்பட்டுவிட்டதெனச் சொல்ல முடியவில்லை. முற்றுப்பெற விரும்பாத பல பகுதிகள் வாசிப்பவரின் கற்பனைக்கென ஏங்கி நிற்கின்றன.