book

பைசா கோபுரம் கட்டுவோமே!

Paisa Gopuram Katuvoame!

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி. சீனிவாசன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2006
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Add to Cart

ரம்மியமான மாலைப்பொழுது. பார்க், பீச், என்று ஏதோ ஒரு இடம்.  காதலி, புது மனைவி அல்லது பால்ய நண்பர் என யாரோ
உடன் இருக்கிறார். வேர்க்கடலையைக் கொறித்தபடியே உரையாடிக் கொண்டிருக்கிறீர்கள். பழைய நினைவலைகளின் சுகம்.  கடலையை வாங்கிய உடனேயே, அதில் நான்கைந்தை எடுத்து, உடைத்து, நன்றாக உள்ளதா என்று சோதித்தப் பின், அதைத் தனியாக வைத்துக் கொண்டு, கடைசியாகச் சாப்பிட்டால், எதிர்பாலாத இறுதிக் கசப்பைத் தவிர்த்திருக்கலாமே. வரும் பணத்தை கொஞ்சத்தைச் சேமித்து வைப்பது கூட இது  போன்ற யுக்திதான். ஓட்டம் மிகுந்த காலங்களிலேயே ஊன்று கோல் காலங்களுக்காகச் சேமித்தல் என்பது புத்திசாலித்தனம். தனது புற்றில் நெல்லைச் சேமிக்கும் எறும்பு, அதன் முனைகளைக் கடித்த பின்தான் சேகரிக்கும். அப்படிச் செய்யவில்லை என்றால் மழை மற்றும் ஈரப்பத்தில் நெல், முளை விட்டுவிடும். உணவிற்கு ஆகாது. சேமிப்பது எங்கு, எப்படி போன்ற விஷயங்கள் இப்புத்தகத்தில்  அலசப்பட்டுள்ளன. இதன் விளிம்புகளைத் தாண்டி எந்த வொரு முதலீட்டு வழியும் இல்லை என்று சொல்வது அசட்டுத்தனம் நிறைந்த கர்வமாகிவிடும். பட்டப் படிப்பு தந்த தெளிவு, சுயமாகச் சுட்டுக் கொண்டது. சோதனை முயற்சியில் கண்ட வெற்றிகள், அனுபவஸ்தர்களின் பட்டறிவுப் பகிர்தல் என, பல விஷயங்களின் நேர்த்தியான கலவையே இக்கட்டுரைகள்.

                                                                                                                                                          -பதிப்பகத்தார்.