book

பாதை பழசு பயணம் புதுசு

Paathai Palasu Payanam Puthusu

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சோ. சத்தியசீலன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :152
பதிப்பு :3
Published on :2008
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, முயற்சி, திட்டம், உழைப்பு
Out of Stock
Add to Alert List

ஒரு நூலைப் படிப்பதற்கு முன்பு மனத்தை வெறியாக வைத்துக் கொள்ளுங்கள். படிக்கும்போது புதியவை பதிவாக வசதியாக
இருக்கும்ய என்று அறிஞர்கள் கூறுவார்கள். அதற்கேற்றபடி  இந்நூலில் பதிவுக்கு நிறைய செய்திகள் உள்ளன. அணில் கடித்த பழங்கள் சுவையாக இருக்கும். ஏன் என்றால் சுவையானதைத் தேடித்தின்பது அணிலுக்குரிய திறம். இதுபோல் பல அனுபவம், பல கல்வி உடைய பெரியோர்கள் கூறும் செய்திகள் அணில் கடித்த பழமாக இருக்கும். இதை இந்த நூலைப் படிப்பவர்கள் உடனே உணர்வார்கள். ஒரு செய்தியை அனுபவத்தால் விளக்குகிறார். அது நமக்குப் புரிவதற்காக ஓர் அரிய நிகழ்ச்சியையோ ஓர் அறிஞர் ஊறிய கருத்தையோ செய்திகளைப் பிழிந்து தந்துள்ளார். எதேயும் காரண காரியத்தோடும் இருக்க முறையிலும் சிந்தித்துச் செயல்படுவது இவர் இயல்பு. இவருடைய மேடைப் பேச்சில் ஒரு சிறந்த கட்டுக் கோப்பை உணர முடியும். அதேபோல் இந்நூலிலும் கட்டுக் கோப்புக் குலையாதபடி நிரல்படச் செய்திகளைச் சொல்வதால் படிக்கும் ஆர்வம் மிகுந்து வருகிறது. எல்லாத் தரப்பினருக்கும் ஏற்ற செய்திகள் இந்த நூல் முழுவதும் பரவி உள்ளன. இலக்கியம், ஆன்மிகம், சமூகம், மனோவியல், வாழ்வியல், பயண அனுபவம் முதலிய பலதுறைச் செய்திகள் என்னும் பாவுநூலில் சிந்தனைத் தெளிவு எனும் ஊடு நூல் பாய்ச்சி இந்த நூல் நெய்யப்பட்டுள்ளது. வாழ்வில் நீண்ட தாழ்வாரப் பகுதியில் பொலிவோடும், புன்னகையோடும் உலாவ வேண்டிய நெறி முறைகளை இது எடுத்து விளக்குகிறது.

                                                                                                                                              அன்பு, அ. அறிவொளி.