வாழ்தல் ஒரு கலை
Vaalthal Oru Kalai
₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுகி. சிவம்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :144
பதிப்பு :8
Published on :2010
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Add to Cartவாழ்க்கை விடை தெரியாத வினாவாகப் பலரைப் பயமுறுத்துகிறது. இன்னும் பலருக்கு அது ஒரு புரியாத புதிராகிக் குழப்பம்
ஏற்படுத்துகிறது. வெகு சிலருக்கே அது ஓர் ஆனந்த அலை. வாழ்தல் என்பது ஒரு கலை என்பதைப் புரிந்து இரசித்து, ருசித்து அனுபவிக்க வேண்டிய ஆனந்த அனுபவமாக முழுமையான விழிப்புடன் உணர வேண்டிய முழுவிழிப்பு நிலை. கடந்த காலத்தில் மனதை வைத்து வாழும்போதே இறந்து போவது சரியா? பிறக்காத எதிர்காலத்தில் மனதை வைத்து மிதந்து போவது சரியா? இல்லை. இல்லை. நிகழ்காலத்தில் நின்று இன்புறுதல் , இதுவே வாழ்க்கை. 'விதிதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது ' ஊழ்வினை தான் இன்ப துன்பங்களை அனுபவிக்கச் செய்கிறது. அந்தத் தலையெழுத்தை மீறி நாம் என்ன செய்து விட முடியும் ? என்று உங்களில் சிலர் கேள்வி எழுப்பலாம். விதி உங்களை எங்கே வைத்திருந்தாலும் எந்த நிலையில் வைத்திருந்தாலும் அங்கேயே, அந்த நிலையிலேயே வாழ்க்கையை ஓர் ஆனந்த அனுபவமாக்கிக் கொள்ளலாம் என்பதனைத்தான் நான் உணருகிறேன். ஆனால், வாழ்க்கையில் நீங்கள் காணும் ஏற்றத் தாழ்வுகள், வெற்றி தோல்விகள் போன்றவை வேண்டுமானால் ஒரு வேளை விதியால் தீர்மானிக்கப்பனலாம். கடந்த காலம் கல்லறை, எதிர்காலம் மாய வான், நிகழ்காலம் தான் நிஜமான பூமி. வாழ்க்கை வேறு எங்கேயும் இல்லை. இங்கேயே . இந்தக் கணத்தில் தான் உள்ளது,.
-சுகி. சிவம்.