தேன் பலா
Thean Palaa
₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். சீதாலெட்சுமி (N.Seethalakshmi)
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :364
பதிப்பு :1
Published on :2014
Add to Cartதளவாயபுரத்தில் உள்ள ஒரு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாட்டின் மாநில கீதமான தமிழ்த்தாய் வாழ்த்தை, மாணவியர் உரக்கப் பாடிக் கொண்டிருந்தனர். ஆறாம் வகுப்பு முதல்... பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவிகள், பிரிவு வாரியாக.. தனித்தனி வரிசையில் நின்றிருந்தனர். எட்டாம் வகுப்பு 'அ' பிரிவுக்குரிய வரிசையில்... உயர வாரியாக நின்றிருந்த பெண்களில், பதினாறாவதாய் நின்றிருந்த விஜயா, தன் முன்னே நின்றிருந்த அகிலாண்டேஸ்வரியின் கால்களைத் தன் கால்களால் சுரண்டிவிட்டாள். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிக் கொண்டிருக்கும் வேளையில், தொடர்ந்து வந்து கொண்டிருந்த அந்த சுரண்டல், சிறு எரிச்சலைக் கிளப்ப, "சும்மா இருடி!" என்று தலையைத் திருப்பி, தையல் அவளைக் கண்டிக்க,