book

சொல்வது நிஜம் (மூத்த ஊடகவியலாளரின் நெஞ்சைச்சுடும் அனுபவங்கள்)

Solvathu Nijam (Mootha Oodagaviyalalarin Nenjaisudum Anubavangal)

₹235+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மணா
பதிப்பகம் :சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sixth Sense Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2017
ISBN :9789383067527
குறிச்சொற்கள் :chennai book fair 2017
Add to Cart

ஒவ்வொரு கட்டுரையிலும் சொல்லப்பட்திருக்கும் தகவல்கள் அனைத்தும் ஆதாரத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் சமூகக் கட்டமைப்பில் அடிமட்டத்தில் வாழும் விளிம்புநிலை மனிதர்கள் படும் கொடுந்துயரங்கள் கண்முன் சாட்சியமாகியுள்ளன.

'தீச்சட்டி கோவிந்தன்' என்ற காவல்துறை அதிகாரி, விடுதலை போராட்ட வீராங்கனை சொர்ணம்மாளை நிர்வாணமாக்கிக் கொடுமை செய்த அநீதியைக் கூறிவிட்டு அதே விடுதலை வீராங்கனைக்கு தியாகிகளுக்கு உரிய சலுகை கிடைக்காத கோபத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

நாட்டுப்புறச் சிறுவர்களின் வாழ்க்கை, பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் சிறுமிகளின் வாழ்க்கை , இவை படிப்பவர்களின் மனசாட்சியைக் கிளறி, இத்தனையும் உண்மைதானா? சுதந்திர நாட்டில் இவை எல்லாம் இன்னமும் நடக்கின்றனவா? என்று நினைக்கத் தோன்றுகிறது.
மணா அவர்களின் நீண்ட அனுபவமும், சமூக அக்கறையும் இக்கட்டுரைகளை எழுதத் தூண்டியுள்ளன. அவரின் நெஞ்சக்குமுறல் எழுத்தில் வெளிப்படுகிறது. படிப்பவர்களைச் சிந்திக்க வைப்பதில் மணா வெற்றி அடைந்திருக்கிறார்