book

மீன் சமையல்

Meen Samayal

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :காஞ்சனமாலா
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788183689519
Out of Stock
Add to Alert List

அசைவ உணவுகளிலேயே துளிகூட உடல்நலன் கெடுக்காத உணவு என்றால் அது நிச்சயமாக மீன் உணவுதான். அசைவப் பிரியர்கள் பெரும்பாலானவர்களுக்குப் பிடித்த உணவும்கூட. இன்னும் சொல்லப் போனால் உலகின் பெரும்பாலான மக்கள் மீன் ரசிகர்கள்தான். மிக எளிய மனிதர்களுக்கும் கிடைக்கக்கூடிய சுவையான மீன் உணவை நமது உணவில் தொடர்ந்து சேர்த்து வந்தால் எந்த நோயும் நெருங்காது என்கிறார்கள் மருத்துவர்கள். மீனில் அதிகமாக இருக்கும் ஒமேகா 3 அமிலம் பல்வேறு நோய்களில் இருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது. அதிகப் புரதச்சத்துகொண்ட, கொஞ்சமும் கொழுப்புச் சத்து இல்லாத மீன் உணவு இதயத்துக்கு மிகுந்த பாதுகாப்பைத் தருகிறது.

சிக்கன், மட்டன் போல இல்லாமல் மீனில்தான் எத்தனை எத்தனை வகைகள்! வஞ்சிரம், விரால்,இறால், நண்டு, நெத்திலி, சங்கரா, கெளுத்தி, பாறை மீன் என்று பல்வேறு மீன்களைக்கொண்டு விதவிதமாகச் சமைப்பதில் உள்ள ஆனந்தமே அலாதியானதுதான்.சூப் வகைகள், பிரியாணி, புலாவ், பிரைட் ரைஸ் வகைகள், குழம்புகள், கிரேவிகள், வதக்கல்,வறுவல், தொக்கு, புட்டு, ஸ்நாக்ஸ் வகைகள் என்று தினுசுதினுசான 100 குறிப்புகள் அள்ளிப் பரிமாறப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம் உங்கள் கையிலிருந்தால் உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியம் உங்கள் கையில்.

சமைத்து அசத்துங்கள். சாப்பிட்டவர்களின் பாராட்டுகளை அள்ளிக் குவியுங்கள்.