book

ஐயனார் கோயில் குதிரை வீரன்

Iyyanaar Koil Kuthirai Veeran

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தாரமங்கலம் வளவன்
பதிப்பகம் :காவ்யா
Publisher :Kaavya
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2016
குறிச்சொற்கள் :தாரமங்கலம் வளவன்
Add to Cart

பாடம்சொல்லும்கதைகள்
வளவ. துரையன்
 
வாழ்க்கை எல்லாரையும் புரட்டித்தான் போடுகிறது. சிலநேரங்களில் காரணமே தெரியவில்லை. உலகில் நாமே கண்கூடாகப் பார்க்கிறோம். நல்லவராய் இருப்பவர்கள் பலதுன்பங்களுக்கு ஆளாகிறார்கள். வாழ்வில் வெற்றிகாணமுடியாமல் திணறுகிறார்கள்.

அதேநேரத்தில் பலவழிகளில் எல்லார்க்கும் துன்பங்கள் செய்யும் தீயவர்கள் நல்லபடியாய்க் காட்சி தருகிறார்கள். இதற்கு என்ன விடை என்று பலரும் தேடினால்  இறுதியில் விதி எனும் ஒற்றைச் சொல்லில் முடித்து விடுவார்கள் இது சான்றோர் பெருமக்களால் இன்னும் ஆராயப்பட வேண்டும் என்று தான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குறள் எழுதிய வள்ளுவப் பெருமானும் கூறுகிறார். அதனால் தான்,

      அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
       கேடும் நினைக்கப் படும்”

என்கிறார். அதேபோலஎன்னதான்பகுத்தறிவுஎன்றுபேசினாலும்சிலவேளைகளில்சகுனங்கள், சாத்திரங்கள் இறை நம்பிக்கை எல்லாமே உண்மைதானா என்றெண்ணத்தான் தோன்றுகிறது. இவற்றைப் புறந்தள்ளவும் முடியவில்லை. ஒரு சிலரின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது அவை எல்லாமே நமக்குப் பாடங்கள் சொல்கின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது. சிலநேரம் பகுத்தறிவும் மற்றசில நேரங்களில் பழமைவாதமும் போட்டிக்கொண்டுவெல்கின்றன. இவற்றை எல்லாம் எண்ணிக்கொண்டுதான் தாரமங்கலம்வளவனின்  “ஐயனார்கோயில்குதிரைவீரன்” சிறுகதைத் தொகுப்பை அணுக வேண்டியுள்ளது.

      தனத்துக்குப் பெயரேராசியில்லாதவள் என்றுதான். அவள் வாழ்வில் அதுபலித்துக்கொண்டே வருகிறது. மணம் முடிந்து நல்லபடியாய் இல்லறம் நடக்கும்போது கணவனும் பிள்ளையும் விபத்தில் மறைகின்றனர். பெற்றவர்களுடன் வாழவருகிறாள். அவர்களும் மடிந்து போகிறார்கள். அவளுக்கும் கால் ஒடிந்துபோகிறது. அவளை மணக்க வேண்டிய முறைமாமன் அவளுக்காகவே இன்னும் காத்திருக்கிறான். இப்போது கடைசியில் அவன் அவளை அவன் மணந்து கொள்கிறான். இதுதான் ”முறைமாப்பிள்ளை” சிறுகதை. இங்கு சிலகேள்விகள் எழும்புகின்றன. முறைமாப்பிள்ளைக்காகவே தனத்தின் வாழ்வில் விதி விளையாடியதா? இக்கதை ராசியை நம்புங்கள் எனச் சொல்கிறதா? இறுதிவரை காத்திருந்து ஊனமான பின்னரும் அவளைக் கைப்பிடிப்பவனின் உன்னத மனத்தைச் சொல்கிறதா?

ஒருசிறுகதை படித்துமுடித்த பின்னாலும் வாசகனின்   மனத்தில் இடம்பெற்று அவன் மனத்தைக் குடைந்துகொண்டே இருக்க வேண்டும். சிலமுடிவுகளை வாசகனின் மனத்தில் எழும்பச் செய்ய வேண்டும். ஒரு மலர் மெல்ல மலர்வதுபோல அவன் ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஆசிரியர்தானாக ஒரு முடிவைஅ வனிடம் திணித்தால் அதுபிரச்சாரமாகிவிடும். முதலில் நாம் தனத்தைப் படித்துப் பரிதாபப்படுகிறோம். அவள் தன் மாமனை வேறுதிருமணம் செய்துகொள்ளச் சொல்கிறாள். ஆனால் இறுதியில் அவள்மாமன் இசக்கிதான் வாசகனின் மனத்தில் இடம்பெறுகிறான். ராசி என்ற பேதமும் மறைந்து போய்விடுகிறது.

      ”சுமங்கலிவேஷம்” மற்றும் “ஜமீன்தார்மனைவி” ஆகிய சிறுகதைகள் நம் பண்டைய பாரம்பரியமான பெண்களின் மனத்தைக் காட்டிப்பாடம் நடத்துகின்றன.

இன்னும்கூடஇவ்வாறுபெண்கள்இருக்கிறார்களாஎன்றகேள்வியையும்இக்கதைகள்எழுப்புகின்றன. ஊடகங்கள் சொல்லித்தரும் நச்சுப்புனைவுகளுக்கிடையிலும் இவைபோன்ற படைப்புகள் என்றாலும் காலம் காலமாக இது இன்னும் தொடர வேண்டுமா என்றும் வாசகன் கேட்கின்ற சூழலை கதை உருவாக்குகிறது. ஆனால் நாகரிகம் தான் மாறக்கூடியது; பண்பாடு என்றும் மாறாததுதானே என்ற விடையும் எழுவது தவிர்க்க முடியவில்லை.

இரு கதைகளின் தலைவிகளுக்கும் இரு வேறுவகைகள் என்றாலும் துன்பம் ஒன்றுதான். பாலுக்குச் சர்க்கரை இல்லை என்றாலும், கூழுக்கு உப்பில்லை என்றலும் வேதனை ஒன்றுதானே? சுந்தரத்தின் அப்பா குடிகாரர்; குடும்பத்தை விட்டுப்பிரிகிறார். இப்படிச் சொல்வதை விட சுந்தரத்தின் அம்மா அவன் சிறுகுழந்தையாக இருக்கும்போதே கணவனை விட்டுப்பிரிந்து போகிறார் என்று சொல்லலாம். அவனை நல்ல பணிக்கு வரும்படி ஆளாக்குகிறார். கணவன் எல்லாம் இழந்து உடல்குன்றி வரும்போது மன்னித்து ஏற்றுக்கொள்கிறாள். இத்தனை நாள் சுமங்கலி வேஷம் போட்டவள் உண்மையிலேயே சுமங்கலியாகிறாள்.