book

மெலூஹாவின் அமரர்கள் (சிவா முத்தொகுதி 1)

Meloohavin Amarargal (Shiva Muthoguthi 1)

₹359.1₹399 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அமீஷ்
பதிப்பகம் :Westland Publicaation
Publisher :Westland Ltd
புத்தக வகை :ஆன்மீக நாவல்
பக்கங்கள் :450
பதிப்பு :1
Published on :2015
ISBN :9789383260157
Add to Cart

அமிஷ் திரிபாதி 18 அக்டோபர், 1974 இல் பிறந்தார். அவர் ஒரு இந்திய நிதித்துறை எழுத்தாளர் ஆவார், அவர் முத்தொகுப்புகளுக்கு பெயர் பெற்றவர் - மெமுஹாவின் அழியாத தன்மை, நாகங்களின் ரகசியம் மற்றும் வாயுபுத்திரர்களின் சத்தியம். அவர் தற்போது ராமச்சந்திர தொடரின் முதல் தவணையை தொடங்கும் திட்டத்தில் முதலீடு செய்துள்ளார் - இக்ஷ்வாகுவின் சியோன். சிவா முத்தொகுப்பு உலகம் முழுவதும் இடியுடன் கூடிய ரசிகர்களைப் பெற்றுள்ளது மற்றும் அமிஷை பல மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றவர் ஆக்கியது. உலகெங்கிலும் உள்ள சிறந்த தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் மதிப்புமிக்க திட்டமான தி ஐசன்ஹவர் ஃபெலோவிற்கும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது ஒரு மனிதனின் கதை. காலம், தெய்வமாய் மாற்றிய ஒரு மனிதனின் கதை. கி மு 1900. இன்றைய இந்தியர்கள், சிந்து சமவெளி நாகரீகம் என்று தவறாகக் குறிப்பிடும் பகுதி. அன்று வாழ்ந்தவர்களோ, அந்த நிலப்பரப்பை மெலூஹா என்றழைத்தனர். பல நூற்றாண்டுகளுக்கு முன், உலகின் மிகச் சிறந்த அரசர்களுள் ஒருவரான இராமபிரான் உருவாக்கிய ஏறக்குறைய அற்புதமான சாம்ராஜ்யம். ஒரு காலத்தில் புகழும் பெருமையுமாய் சிறந்து விளங்கிய இதன் ஆட்சியாளர்களான சூர்யவம்சிகள், பல ஆபத்துக்களைச் சந்திக்கின்றனர். அவர்களது ஜீவநதி சரஸ்வதி, வற்ற ஆரம்பித்து, முற்றுமாய் அழியத் துவங்கிவிட்டது. கிழக்கே வாழும் சந்திரவம்சிகளிடமிருந்து, பயங்கர தீவிரவாதித் தாக்குதல்களையும் சந்திக்கின்றனர். நிலைமையை இன்னும் சிக்கலாக்கும் விதமாய், சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டு, விகாரமடைந்த முகமும் உடலுமாய், பல அற்புத சக்திகள் படைத்த நாகர்கள் என்னும் குலத்தாருடன் சந்திரவம்சிகள் கைகோர்த்துக் கொண்டது போலவும் தெரிகிறது. இப்போது சூர்யவம்சிகளின் ஒரே நம்பிக்கை, என்றோ அவர்களிடையே பரவி, வேரூன்றிவிட்ட ஒரு ஆருடம்: ‘தீமை தலை விரித்தாடும் போது; அதன் கொடூரம் எல்லை மீறி, எதிரிகள் முழுமையாய் வென்றுவிட்டார்கள்; இனி, போக்கிடம் இல்லையென்ற நிலையேற்படும்போது - ஒரு வீரன் வருவான்.’ சிவா முத்தொகுதியில் இதுவே முதல் புத்தகம். சாதாரண மனிதன் ஒருவனின் பிறவிப்பயன், அவனை நம் தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாய், மகாதேவராய் மாற்றிய கதை. காதேவர். தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம். தீய சக்திகளை ஒழிக்க வந்தவர், அன்புக் காதலர். ஆவேசப் போர்வீரர், ஆடல் வல்லாள். அற்புதத் தலைவர். சக்திகளையும் தனக்குள் அடக்கினாலும், யாராலும், எதனாலும் சீரழிக்க முடியாதவர். கத்தி போன்ற கூர்மையான நுண்ணறிவு. அதனுடன் சட்டென்று கொழுந்து விட்டெரியும் கோபம். கைகோர்த்த, சென்ற பல நூற்றாண்டுகளில், நம் நாடு தேடி வந்த யாரும் ஆள வந்தோர்; வியாபாரிகள்: சான்றோர்; பயணியர் - இப்படி ஒரு மனிதன் உண்மையில் வாழ்ந்திருக்கலாம் என்பதை நம்பவில்லை. இவன் நிச்சயம் கதைகளிலும், கற்பனைகளிலும் மட்டுமே காணப்படும் அதிசய புருஷனாக, மனித மனம் உருவாக்கிய அபூர்வ வஸ்துவாக இருக்க வேண்டும் என்றே எண்ணினர். துரதிர்ஷ்டவசமாக அவர்களது கூற்றே, நாமும் போற்றி வணங்கும் சித்தாந்தமாகப் பதிந்து விட்டது.