book

திணைக் கோட்பாடு

Thinai Kotpaadu

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :துரை. சீனிச்சாமி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :155
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788123431611
Add to Cart

நாம் தொல்காப்பியம், அகத்திணையியல், புறத்திணையியல்களை வைத்துக்கொண்டே சங்கப் பாடல்களைப் பார்க்கின்றோம். சங்க இலக்கியம் பற்றிய நமது பார்வையைத் தொல் காப்பியமும் அதற்கான உரைகளும் தீர்மானித் துள்ளன. தொல்காப்பியப் பொருளதிகாரம் கிடைக்காமல் சங்க இலக்கியப் பாடல்கள் மாத்திரமே கிடைத்திருந்தால், சங்க இலக்கி யங்கள் பற்றிய எமது மதிப்பீடு இப்பொழுது உள்ளதுபோன்றே அமைந்திருக்குமா? என்பது ஒரு சுவாரசியமான வினாவாகும்.’ (2007:47) என்ற பேராசிரியர் கா. சிவத்தம்பியின் கேள்வியுடனேயே இந்தக் கட்டுரையைத் துவங்கலாம் என்று எண்ணுகிறேன். மேற்குறிப்பிட்ட குறிப்பு சங்க இலக்கிய வாசிப்பு சார்ந்த உரையாடல்களின் பெரும் பகுதி ‘தொல்காப்பியம்’ என்ற இலக்கணப் பிரதியையும் அது சார்ந்த உரைமரபுகளோடும் கொண்டுள்ள பிரிப்பறியாப் புணர்வை எடுத்துக்காட்டுவதோடு இலக்கணமயப்பட்ட இலக்கிய வாசிப்பைப் புறக் கணிக்கும் புலமைக்குரல்களையும் கவனப்படுத்துகிறது.