book

பெரியார் கணினி

Periyaar Kanini

₹650
எழுத்தாளர் :புலவர் நன்னன்
பதிப்பகம் :ஏகம் பதிப்பகம்
Publisher :Yegam Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :1136
பதிப்பு :3
Published on :2016
Add to Cart

பெரியாரைப் பற்றிப் பாடிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், மண்டைச் சுரப்பை உலகு தொழும்என்றார். சமூக நோய்களுக்கு மருந்து சொன்ன பெரியார், அறிவியல் வளர்ச்சியைப் பற்றியும் முன்னோக்கிச் சிந்தித்தவர்.

எதிர்காலத்தில் உலகம் எப்படி இருக்கும் என்று தனது தொலைநோக்குப் பார்வையால் எடுத்துச் சொல்லியவர்.

அவர் எழுதிய இனி வரும் உலகம் நூலில் இன்றைய செல்பேசியை அன்றே சொல்லியிருந்தார். அந்நூலில் அவர் சொல்லிய பல அறிவியல் கருவிகளுள் இன்று நம் வாழ்வில் ஒன்றாகிவிட்ட கணினியும் ஒன்று.

அந்தக் கணினியை பெரியாரே நேரில் பார்த்தும்விட்டார் என்பது உங்களுக்குப் புதிய செய்தியாக இருக்கலாம்.

ஆம், அது 1970 ஆம் ஆண்டு, ஜூலை 16ஆம் நாள். சென்னை, கிண்டி பொறியியல் கல்லூரியில் (இன்றைய அண்ணா பல்கலைக் கழகம்) நடைபெற்ற தமிழ் மன்ற  விழாவுக்கு பெரியார் சென்றிருந்தார். அப்போதுதான் கம்ப்யூட்டர் என்ற கருவி கல்லூரிக்காக வாங்கப்பட்டுள்ளது என்று சொல்லியிருக்கிறார்கள்.

உடனே பெரியார் அதை நான் பார்க்கவேண்டும் என்று கூறிவிட்டார். கல்லூரி நிருவாகத்தினரும் சரி என்று கூறினர். ஆனால் அந்தக் கணினி இருப்பது முதலாவது மாடியில்.

அய்யா பெரியாரால் நடந்து வரமுடியாது. பிறரின் உதவியால் தூக்கித்தான் செல்ல முடியும். அது பெரியாரின்  உடல்நலத்துக்குச் சிரமமாக இருக்கும். இதை அங்குள்ளவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும் அதைப்பற்றி பெரியார் கவலைப்பட வில்லை. என்னைத் தூக்கிச் செல்லுங்கள் என்று கூறிவிட்டார். அவர்களும் அய்யாவை முதல்மாடிக்குக் கொண்டு சென்றுவிட்டனர்.

இப்போது இருப்பது போல மேசையில் வைக்கும் அளவுக்கு சிறிய அளவிலான கணினி அப்போது இல்லை. அது பெரிதாக இருக்கும். பெரிது என்றால் ஒரு அறையையே அடைத்துக் கொண்டிருக்கும். அவ்வளவு பெரியது. அந்தக் கணினியின் பெயர் அய்.பி.எம்.1620. அப்போது கணினி என்று தமிழில் பெயரிடவில்லை. அது கம்ப்யூட்டர் என்றுதான் அழைக்கப்பட்டது.

இந்த இயந்திர மூளையைக் காட்டி விளக்கியவர் அன்றைய பேராசிரியரும், பின்னாளில் துணைவேந்தராகவும் விளங்கிய வா.செ.குழந்தைசாமி அவர்கள். அவரே பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த நிகழ்வை விவரித்தார். அந்தக் கல்லூரியில் 50க்கும் அதிகமான பேராசிரியர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பகுதியினர் இந்தக் கம்ப்யூட்டரைப் பற்றித் தெரிந்து கொள்வதில் காட்டிய ஆர்வத்தைவிட அய்யா பெரியார் காட்டிய ஆர்வம் என்னை வியக்க வைத்தது. அறிவியலின் மீதுதான் அய்யாவுக்கு எத்தனை ஆர்வம்! வினாடிக்கு 333 எழுத்துகளைப் படிக்கும் வேகம் கொண்டது என்பதையும், வினாடிக்கு 10 எழுத்துகளை அச்சடிக்கும் என்ற தகவலையும் சொன்னோம்.

கிறித்துவுக்குப் பிறகு உள்ள எந்தத் தேதியைச் சொன்னாலும் அதன் கிழமையைச் சொல்லும் என்று சொன்னோம். அய்யாவும் அதனைச் சோதித்து அறிய விரும்பினார். 2.12.1933 இந்தத் தேதியின் கிழமை என்ன? என்று கணினியிடம் கேட்கப்பட்டது.

பட்டென்று சனிக்கிழமை என பதில் வந்தது.

17.9.1879 (பெரியாரின் பிறந்த தேதி) என்ன கிழமை என்று கேள்வி பிறந்தது.

அது புதன்கிழமை என்று கணினி பதில் சொன்னது.