book

தொழிலா? அயல்நாட்டில் வேலையா? (ஜோதிட ஆய்வுகள்)

Thozhila?Ayalnaatil Velaiya?(Jothida Aaivugal)

₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப. சுப்பிரமணியன்
பதிப்பகம் :ஸ்ரீ அலமு புத்தக நிலையம்
Publisher :Shri Alamu Puthaga Nilayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2016
Add to Cart

இன்று பெரும்பாலான பெற்றோர்களுக்கு, தங்கள் பிள்ளைகள் ஒரு நல்ல கல்லூரியில் சேர்ந்து ஏதாவது ஒரு பட்டம் பெற்று, கை நிறைய சம்பளம் தரும் ஒரு வேலையில் சேர்ந்தால், அதுவே போதும் என நினைக்கிறார்கள். பல இளைஞர்களும், வருடக் கணக்கில் வேலை பார்த்து, முதியவர்களாகி, சாய்வு நாற்காலியில் பொழுதை கழிக்கும் வாழ்க்கை முறையே விரும்புகின்றனர். பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்கும், தற்போதைய நிலைக்கும் என்ன வித்தியாசம் என்றால், முன்பு ஒரே நிறுவனத்தில் நீண்ட நாட்கள் பணி புரிந்து வந்தனர். ஆனால் இப்போது, வருடத்திற்கு ஒரு வேலை மாற்ற முடிகிறது. தகவல் தொழில் நுட்ப துறையில் ஏராளமான வேலைகள் வந்து, இங்கிருந்தபடியே உலகம் முழுவதும் வேலை செய்ய முடிகிறது.
அதுபோலவே சுயதொழில் தொடங்குவதும், மிக எளிதாகி விட்டது. ஒரு கணினியும், நல்ல ஒரு தொழில் யோசனையும் இருந்தாளல் , வீட்டில் உள்ள ஒரு சிறு அறையில் இருந்தே, உலகம் முழுவதையும் சென்றடையக் கூடிய தொழிலை ஆரம்பிக்க முடியும். இணையம் உலகினை அந்த அளவிற்கு இணைத்துள்ளது.

இந்த புத்தகத்தின் நோக்கம்: இளைஞர்கள் ஏன் சொந்த தொழில் தொடங்க முன்வரவேண்டும்? சொந்த தொழிலில் என்னென்ன நன்மைகள் உள்ளன? அதில் உள்ள கஷ்டங்கள் என்ன? எப்போது மற்றும் எப்படி ஒரு தொழிலை தொடங்குவது? என்பது போன்ற விசயங்களை தீவிரமாக அலசுவதாகும்.
இதைப் படித்து, அதன்மூலம் தன்னம்பிக்கை வளர்ந்து, ஒரு தொழிலை தொடங்கி ஒருவர் வெற்றி பெற்றால், அதுவே இப்புத்தகத்தின் வெற்றியும் ஆகும் என்பது அவரது அசைக்கமுடியாத நம்பிக்கை. சுயதொழில் தொடங்கி, வாழ்க்கையில் சாதிக்க அனைவருக்கும் வாழ்த்துக்கள்!