book

பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்

Payanulla Veetu Kurippugal

₹12+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மீனாட்சி இலட்சுமணன்
பதிப்பகம் :ஸ்ரீ அலமு புத்தக நிலையம்
Publisher :Shri Alamu Puthaga Nilayam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2016
Add to Cart

பெப்பர்மின்ட் எண்ணெய் எலிகளைத் தடுக்க நல்ல தீர்வு தரும். காட்டன் பந்துகளை பெப்பர்மின்ட் எண்ணெயில் நனைத்து, அவற்றை எலி நடமாடும் இடங்களில் வைக்கவும். இது நிச்சயமாக திருப்திகரமான முடிவுகளை கொடுக்கும்.

- தேநீர் பைகள் கண்களுக்கு கீழே ஏற்படும் கருவளையங்களை அகற்ற உதவும். தேநீரில் உள்ள ஆண்டிஆக்சிடெண்ட்ஸ் மற்றும் காஃபின் ஆகியவை ரத்த நாளங்களை சுருங்கச் செய்யும். தசை நாண்களின் வீக்கம் மற்றும் நிறமாற்றத்தைக் குறைக்கும். இரண்டு பயன்படுத்தப்பட்ட தேநீர் பைகள் (பச்சை அல்லது கருப்பு தேநீர்) எடுத்து அரை மணி நேரம் குளிரவைத்து பின் கண்களில் வைக்கவும். புத்துணர்வாக உணருவீர்கள். 

- ஆலிவ், கடுகு மற்றும் ஆமணக்கு எண்ணெயைக் ஒன்றாக கலக்கவும். உங்கள் உச்சந்தலையை எண்ணெய் கலவையால் கொண்டு மசாஜ் செய்து 1 மணி நேரத்திற்குப் பிறகு ஷாம்பூ தேய்து மிதமான சூடு தண்ணீரில் கூந்தலை அலசவும். இதன்மூலம் கூந்தலில்  பிளவு ஏற்படுவதை விரைவாகத் தடுக்கலாம்.