பாரம்பர்ய அரிசியில் பல்சுவை உணவுகள்
Paaramparya Arisiyil Palsuvai Unavugal
₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :135
பதிப்பு :2
Published on :2016
Add to Cartஅரிசி சாதம் சர்க்கரை நோய்க்கு அதிகம் வழிவகுக்கிறது என்று மருத்துவ உலகம் சொல்கிறது. ஆனால் எந்த அரிசி அந்த அபாயத்துக்குக் காரணமாகிறது? தமிழர்களின் பாரம்பர்ய அரிசி வகைகள் பல ஆயிரம் ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்தபோது அந்த அரிசி வகைகள் அனைத்தும் எந்த நோயையும் ஏற்படுத்தியதில்லை. இரண்டு தலைமுறைக்கு முன்னால் இருந்த நம் முன்னோடிகளுக்கு சர்க்கரை நோய் என்றால் என்னவென்றே தெரியாது... காரணம் அவர்கள் உண்டது உன்னதமான, ஆரோக்கியத்தை அள்ளித் தந்த தமிழர்களின் பாரம்பர்ய அரிசி வகைகளைத்தான். பல்லாயிரம் வகை பாரம்பர்ய அரிசி வகைகள் மறைந்துபோனாலும் இன்னும் சில அரிசி வகைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றைத் தவிர்த்துவிட்டு பாலிஷ் போடப்பட்ட பளபளப்பான அரிசியை உண்பதால்தான் சர்க்கரை நோய் போன்ற சகல நோய்களுக்கும் காரணம். நம் நலம் காக்கும் பாரம்பர்ய அரிசிகளையும் அவை தரும் பல நன்மைகளையும் விளக்குகிறது இந்த நூல். ‘புரதம், விட்டமின்கள், தாது உப்புகள் உள்ள தங்கச் சம்பா அரிசியை உண்பதால் மேனி தங்கம்போல மினுமினுக்கும்...’ இப்படி ஏராளமான ஆரோக்கியங்களை மட்டுமே தந்து உடலுக்கு வலிவும் பொலிவும் தரும் பாரம்பர்ய அரிசி வகைகளால், சுவையான பல உணவு வகைகளை செய்யலாம் என்பதை விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். பாரம்பர்யத்தோடு நம் ஆரோக்கியத்தையும் காப்போம்!