துயரங்களின் பின்வாசல்
Thuyarangalin Pinvaasal
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உமா மோகன்
பதிப்பகம் :வெர்சோ பேஜஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :102
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788193210345
Add to Cartஜன்னல் வழி நுழைந்த பூச்சி மின்விசிறியில் அடிபட்டு விடக்கூடாது என்று
துணுக்குற்று எழுந்து ஓடுபவர்களை அவர்களது துணை என்ன சொல்லும்? நாற்பதுக்கு
மேல் புளியம்பிஞ்சைப் பார்த்து முகம் விரிப்பவர் பைத்தியமா? சின்னச்சின்ன
சந்தோஷங்கள், சலனங்கள், எதிர்பார்ப்புகள், தவிப்புகள் மற்றும் ஏமாற்றங்கள்,
பெண்ணிருத்தலியலின் வலிகள் ஆகியவை உமா மோகனின் கவிதைகள். வயல்வேலை, வீட்டு
வேலை என்று ஏதாவது வேலையுடனே அடையாளப்படுத்தப்படும் பெண்கள், செய்யும்
வேலையில் அவர்களின் அப்போதைய உணர்வை பிரதிபலிக்கிறார்கள். வானவில்லை,
பெயர்தெரியாத பறவையை, கடலை, செடியில் மறைந்து கவனிக்கத் தவறியப் பூவை……
பற்றி பேசும் பெண் இத்தொகுப்பில் தேடியும் கிடைக்கவில்லை. துரத்தும் திரவம்
கவிதை படித்து வெகுநேரம் ஆகியும் அது என்னை துரத்திக்கொண்டு இருக்கிறது.
துயரங்களின் பின்வாசலுக்கு பல அடுக்குகள்.