சாக்ரடீஸின் விஷக்கோப்பை
Socratecin Vishakoppai
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.பி. சிற்றரசு
பதிப்பகம் :புதிய வாழ்வியல் பதிப்பகம்
Publisher :Puthiya vazhviyal Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2015
Out of StockAdd to Alert List
தம் அறியாமையை அறிவதே உண்மையான அறிவு என்ற மாமேதை சாக்ரடீசின்
வாக்கு இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாகியும் எங்கும்
எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. இந்த உலகில் மகான்கள் தோன்றும் போதெல்லாம்
அவர்களின் உண்மை போதனைகளை எதிர்கொள்ள திராணியில்லாத மக்களால்
கல்லெறியப்பட்டனர், கழுவேற்றப்பட்டனர். சாக்ரடீசும் அதற்கு விதிவிலக்கல்ல.
ஏன், எதற்கு, எப்படி என்று கேள்விகேட்டு சிந்தை தீயை பற்ற வைத்த பேரறிஞன்
சாக்ரடீஸ் மீது பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டது. கிரேக்க இளைஞர்களின் மனதை
கெடுக்கிறார் என்று மரண தண்டனை விதிக்கப்பட்டது. மன்னிப்பு கேட்டால்
விடுதலையாவதற்கு வாய்ப்பிருக்க, கண்ணசைத்தால் சிறையிலிருந்து தப்புவிக்க
ஏற்பாடுகள் தயாராயிருக்க சட்டத்திற்கு அடிபணிவதேU வீரனுக்கு அழகு என்று
கூறி மாண்டார் சாக்ரடீஸ். ஆனால், அவர் கூறிய கருத்துகள் இன்னும்
மரணிக்கவில்லை. ஏதென்ஸ் நீதிமன்றத்தில் தன் கொள்கைகளை எடுத்துரைத்து
வாதாடிய அவர்தம் உரைகள், நமது நீதி உணர்ச்சியின் உறக்கத்தை
தட்டியெழுப்புகின்றன. மனதின் மயக்கநிலைக்கு மருந்தாகிறது. இவ்வுலகின்
இறுதிநாள் வரை ஏற்கத்தக்க கருத்துகள் நிறைந்திருக்கும் இப்புத்தகத்தை பதிவு
செய்து பாதுகாப்பாய் நமக்களித்த அவரது சீடர்களுக்கு நன்றி செலுத்த
கடமைப்பட்டிருக்கிறோம். நாமும் படித்து, நண்பர்களுக்கும் பரிசளித்து
பயன்பெற ஏதுவான இப்புத்தகத்தை தவறவிடாதீர்கள்.